• முகப்பு
  • இலங்கை
  • முதலில் உதாரணமாக நீங்கள் 1700 ரூபாய் சம்பளம் தோட்ட தொழிலாளர்களுக்கு கொடுங்கள்

முதலில் உதாரணமாக நீங்கள் 1700 ரூபாய் சம்பளம் தோட்ட தொழிலாளர்களுக்கு கொடுங்கள்

ராமு தனராஜா

UPDATED: May 6, 2024, 2:36:55 AM

அரசாங்கத்திடமும் பல தோட்டப்புறங்கள் காணப்படுகின்றன. அதே போல் ஒரு சில பேசும் வீரர்கள் சூரர்களிடமும் சொந்தமான தேயிலை தோட்டங்கள் காணப்படுகின்றன. முதலில் உதாரணமாக நீங்கள் 1700 ரூபாய் சம்பளம் தோட்ட தொழிலாளர்களுக்கு கொடுங்கள் அதற்கு பிறகு தோட்ட கம்பனிகளிடம் கேளுங்கள் 1700 ரூபாய் கொடுங்கள் என்று என ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளர் லெட்சுமணன் சஞ்சை பசறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பளம் கிடைப்பதை நாம் மனமாற ஏற்றுக் கொள்கின்றோம் வாழ்த்தும் தெரிவிக்கின்றோம்.

ஆனால் எம் தோட்ட தொழிலாளர்களை ஏமாற்றுவதையே நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். 

இதுவரை காவமும் 1700 ரூபாய் சம்பளம் பெற்றுக்கொடுப்பதாக தனித்து நாடகம் போட்டீர்கள் ஆனால் தற்போது அரசாங்கத்தையும் இனைத்து கொண்டுள்ளீர்கள் .வீரவசனம் பேசிய நீங்கள் அடுத்த மாதம் 10 ம் திகதி தோட்ட தொழிலார்களுக்கு வழங்கவிருக்கும் சம்பள விபர பட்டியலை எடுத்து பாருங்கள் அதில் 1700 ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கிறதா என்று.

அதுமட்டுமல்லாது மேதினத்தன்று மும்முரமாக நாங்கள் சொல்வதையே தான் செய்வோம் செய்வதையே தான் சொல்வோம் என்று வீரவசனத்துடன் மக்களுக்கு வாக்குறுதி அளித்தீர்கள் ஆனால் பார்ப்போம் நடிகர் ரஜனிகாந்தின் வசனம் எந்த அளவிற்கு வேலை செய்கின்றது என்று.

அதுமட்டுமல்லாது ஒரு தொழிற்சங்கத்தில் உள்ளவர் சொல்லி இருந்தார் தோட்ட தொழிலாளர்களின் ஒருநாள் சம்பளம் முதலாம் திகதிக்கு முன் கிடைக்காவிடின் இரண்டாம் திகதி பதவி விலகுவதாக , ஐயா உங்களுக்கு தோட்ட தொழிலாளர்களிடம் உண்மையான அனபும் பாசமும் இருந்தால் மக்கள் சேவகனாக இருந்தால் நீங்கள் பதவி விலகி இருக்க வேண்டும் .ஆனால் இன்று மே ஐந்தாம் திகதி ஆகி விட்டது. பதவி விலகுவேன் என்று சொன்னது கூட மறந்து விட்டது போல

அதுமட்டுமல்லாது பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் பேச்சுவார்த்தைக்கே வராமல் புறக்கணித்தார்கள் ஆனால் நீங்கள் வெளியிட்ட வர்த்தமாணிக்கு முதலாளிமார் சம்மேளனம் கவனம் செலுத்துவார்களா? என அவர் கேள்வி எழுப்பினார்.

 

 

 

  • 2

VIDEOS

Recommended