• முகப்பு
  • தமிழ்நாடு
  • நாடாளுமன்றத் தேர்தலில் எத்தனை கோடி மக்கள் வாக்களிக்கவில்லை என்று தெரியுமா ?

நாடாளுமன்றத் தேர்தலில் எத்தனை கோடி மக்கள் வாக்களிக்கவில்லை என்று தெரியுமா ?

Admin

UPDATED: Apr 20, 2024, 8:35:27 PM

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 1.90 கோடி பேர் வாக்களிக்கவில்லை என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஓரே கட்டமாக 19-04-2024 நடந்தது.

இத்தேர்தலில் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். 

ஆனால், நேற்று நடைபெற்ற தேர்தலில் வெறும் 69.46 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

அதாவது, 4 கோடியே 32 லட்சத்து 97 ஆயிரத்து 144 பேர் தான் வாக்களித்துள்ளனர். 

30.54 சதவீதம் பேர் வாக்களிக்கவில்லை அதாவது 1 கோடியே 90 லட்சத்து 36 ஆயிரத்து 781 பேர் வாக்களிக்கவில்லை.

 

  • 14

VIDEOS

Recommended