நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு "நாகை நமதே நாப்பதும் நமதே நாடும் நமதே" என்ற முழக்க வாசகங்களுடன் பத்து தீர்மானங்கள்குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் வடக்கு தெற்கு ஒன்றியத்தில் திமுக பொது உறுப்பினர் கூட்டம் கீழ்வேளூர் சண்முகா திருமண மண்டபத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு கீழ்வேளூர் வடக்கு தெற்கு அவைத்தலைவர் மனோகரன், சுப்பிரமணியன் தலைமையில் தலைமை செயற்குழு உறுப்பினரும் கீழ்வேளூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜன் தெற்கு ஒன்றிய செயலாளர் பழனியப்பன் முன்னிலையில் நடைபெற்றது. 

நாகை மாவட்ட செயலாளரும் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவருமான என்.கௌதமன் பங்கேற்று இரண்டாவது முறையாக இளைஞர் அணி செயலாளர்  நியமனம் செய்யப்பட்ட  திருவல்லிக்கேணி மற்றும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கூட்டத்திற்கான பத்து தீர்மானங்களை எடுத்துரைத்தார் அதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது. 

முன்னாள் முதல்வர் மு கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளை கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் வருவதால் இனி வரும் காலங்களிலும் திமுக வெற்றியை யாராலும் பறிக்க முடியாது எனவும் இருந்தாலும் இளைஞர் அணி உறுப்பினர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளின் அடிப்படையில் 18 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களை இல்லம் தேடி உறுப்பினர்கள் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் எனவும்

மாதம்தோறும் தொகுதிக்குட்பட்ட கிளைகளில் கிளை கூட்டம் நடத்தி பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வுகளை உடனடியாக செய்திட வேண்டும். போன்றவை கழக உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு "நாகை நமதே நாப்பதும் நமதே  நாடும் நமதே" என்ற முழக்க வாசகங்கள் அனைவரும் ஒன்றிணைந்து முழக்கமிட்டனர்.

கூட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள் ஒன்றிய கழக நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கிளை செயலாளர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.

நாகை மாவட்ட செய்தியாளர் செ.சீனிவாசன்.
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

The most important beautiful places in the world

தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Largest Forest Area Countries | Forest resources are the health of the world

விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

எம்ஜிஆரின் சூப்பர் ஹிட் பாடல்கள் | M G R Super Hit Songs #mgrsongs #songs

மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

ரசூல் மேட்னஸ் தமிழ் டப்பிங் திரைப்படம் | Russell Madness | Tamil Dubbed Movie #tamilmovies #movies