மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலி.குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே குருமணங்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர்கள் வீரமணி- சத்யா தம்பதியர். இவர்களது மகன் வித்யாசாகர் (13) அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான். நேற்று காலையில் வித்யாசாகர் அயன்பாக்ஸில் தனது உடைகளை தேய்த்துக் கொண்டிருந்தான்.  

வெள்ளிக்கிழமை என்பதால் வீட்டை தண்ணீர் ஊற்றி அலசி இருந்தார்கள்.  அயன்பாக்சில் மின் கசிவு ஏற்பட்டு சிறுவன் வித்யாசாகர் உடலில் மின்சாரம் பாய்ந்து உள்ளது.  தரையில் ஈரம் இருந்ததால் மின்சாரம் சிறுவனை கடுமையாக தாக்கி உள்ளது. 

அலறித் துடித்து கீழே விழுந்தவனை  அருகில் இருந்தவர்கள் மீட்டு கீழ்வேளூர் அரசு மருத்துவமனைக்கும் அழைத்து சென்றனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகப்பட்டினம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி வித்யாசாகர் உயிர் இழந்தான். 

இது குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று மதியம் அவனது உடலை வீட்டிற்கு கொண்டு வந்து நிலையில் அவனுடன் படித்த நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள  கதறி அழுத சம்பவம் அப்பகுதியையே பெரும்சோகத்தில் ஆழ்த்தியது.

நாகப்பட்டினம் மாவட்ட செய்தியாளர் செ.சீனிவாசன்


Sponsor Ad
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

தென்கச்சி சோ சாமிநாதன் அவர்களின் நகைச்சுவை பேச்சு | Thenkatchi Swaminathan comedy speech

Sponsor Ad
தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

எம்ஜிஆரின் சூப்பர் ஹிட் பாடல்கள் | M G R Super Hit Songs #mgrsongs #songs

Sponsor Ad
விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Death on the Nile / Kiss Scenes — Linnet and Simon

Sponsor Ad
விளையாட்டுகள்
மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

டிராகன் அண்டர் தமிழ் திரைப்படம் | Dragon Hunter Full Movie

Sponsor Ad
விளையாட்டுகள்