நாகப்பட்டினம் மாவட்டத்தில் பேரிடர் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு கூட்டம்.குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்நாகப்பட்டினம் மாவட்டத்தில் இயற்கை பேரிடர் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு கூட்டம் சுற்றுசூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வ P.மெய்யநாதன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அ.அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன், தாட்கோ கழக தலைவர் உ.மதிவாணன், கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி முன்னிலையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் சுற்றுசூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது தமிழ்நாடு முதலமைச்சர் உத்திரவுக்கிணங்க மேட்டுர் மற்றும் கல்லணையில் உபரி நீர் திறந்து விடப்பட்டதையடுத்து 14 மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக நேற்றய தினம் கூட்டம் நடத்தினார்கள். 

அதில் இரவு நேரங்களில் உபரிநீரை வெளியேற்றக்கூடாது எனவும், பகல் நேரங்களில் உபரிநீரை வெளியேற்றி அவற்றை கண்காணித்திடவும் அறிவுறித்தனார்கள். அதனடிப்படையில் நாகப்பட்டினம் மாவட்டம் தாழ்வான பகுதிகள் என கண்டறிந்து அப்பகுதிகள் பாதிக்கபடாதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் தென்மேற்கு , வடகிழக்கு பருவமழை , குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்படும் காலகட்டத்தில் புயல், வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என சுற்றுசூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்தார் .

முன்னதாக, வெள்ளப்பெருக்கால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள தீயணைப்பு துறை, காவல்துறை சார்பில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த இரப்பர் படகு, மரம் வெட்டும் இயந்திரம் போன்ற உபகரணங்களை சுற்றுசூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வ P.மெய்யநாதன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அ.அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன், தாட்கோ கழக தலைவர் .உ.மதிவாணன்,கீழ்வேளுர், சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் பார்வையிட்டனர். 

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவகர் மாவட்டவருவாய் அலுவலர் வி.ஷகிலா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெரியசாமி, நகர்மன்ற தலைவர் இரா.மாரிமுத்து மற்றும், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

நாகப்பட்டினம் மாவட்ட செய்தியாளர் செ.சீனிவாசன்


Sponsor Ad
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

ரத்தக்கண்ணீர் திரைப்படம் | M R Radha | Ratha Kaneer Full Movie #rathakaneer #fullmovie #movies

Sponsor Ad
தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

எம்ஜிஆரின் சூப்பர் ஹிட் பாடல்கள் | M G R Super Hit Songs #mgrsongs #songs

Sponsor Ad
விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

யேசுதாஸின் இனிமையான பாடல்கள் | k j yesudass in super hit songs

Sponsor Ad
விளையாட்டுகள்
மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

10 Most Hottest & Sexiest Bikini Actresses In Hollywood

Sponsor Ad
விளையாட்டுகள்