
குரல் தேர்வு
இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்
திருநெல்வேலி,ஆக.5:- சென்னை, உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் லால்வேணா உத்தரவின் பேரிலும், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன், உணவு பாதுகாப்புத்துறை, திருநெல்வேலி மாவட்ட நியமன அலுவலர் பொறுப்பு வகிக்கும் ஜி.செல்வராஜ் ஆகியோரின், ஆலோசனையின் பேரிலும், நெல்லை புறநகர் மாவட்டம் தாழையூத்து காவல் ஆய்வாளர் சந்திரசேகர் மேற்பார்வையில், காவல் உதவி ஆய்வாளர் இன்னோஸ் குமார், இன்று (ஆகஸ்ட்.5) காலையில், தாழையூத்தை அடுத்துள்ள, "ராஜவல்லிபுரம்" கிராமத்தில், சில்லறை விற்பனை நடைபெறும் வெற்றிலை- பாக்கு கடைகள், பெட்டிக்கடைகள், ஷாப்பிங் கடைகள் போன்றவற்றில், திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ராஜவல்லிபுரம் மெயின் பஜாரில் உள்ள, மகேஷ் அண்ட் மகேஷ் ஷாப்பிங் கடையில், தமிழக அரசால் முற்றிலும், தடை செய்யப்பட்டிருக்கும், புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது, கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, அந்த கடையை, சோதனை செய்ததில், விற்பனைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த, 81 பாக்கெட்டுகள் புகையிலை பொருட்கள் இருப்பதும் தெரிய வந்தது.அவற்றை உடனடியாக "பறிமுதல்" செய்த, "காவல் உதவி ஆய்வாளர்" இன்னோஸ் குமார், கடையின் உரிமையாளரான துரைராஜ், மீது மேல்நடவடிக்கை எடுக்குமாறு, உணவுபாதுகாப்புத் துறைக்கு, "பரிந்துரை" செய்தார். ஏனெனில், கடை உரிமையாளர் துரைராஜ்,ஏற்கனவே இந்த ஆண்டு(2022), ஜூன் மாதம், 22-ஆம் தேதி, இது போன்று நடத்தப்பட்ட, "திடீர்" சோதனையின் போது, இதே குற்றத்துக்காக, அபராதம் செலுத்தியவர்! என்ற தகவலையும், உதவி ஆய்வாளர் குறிப்பிட்டிருந்தார். உதவி ஆய்வாளரின் பரிந்துரையை ஏற்று, பாளையஙாகோட்டை மண்டல உணவு பாதுகாப்பு அலுவலர் ஏ.ஆர்.சங்கரலிங்கம், அந்த கடையில் எந்த வியாபாரமும் நடைபெறக்கூடாது! என்பதற்காக, கடையை பூட்டி "சீல்" வைத்ததுடன், கடை உரிமையாளர் தூரைராஜூவுக்கு,10 ஆயிரம் ரூபாய் அபராதமும், விதித்தார். அத்துடன், அந்த கடைக்கு, "அவசர தடை ஆணை உத்தரவு, பிறப்பிக்க வேண்டும்!" என்று, மாவட்ட நியமன அலுவலருக்கு, பரிந்துரையும் செய்தார். திருநெல்வேலி செய்தியாளர் "மேலப்பாளையம்" ஹஸன்
