கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ காயத்திரி காளியம்மன் ஆடி மாத திருநடன உற்சவம்.குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான இலுப்பையடி  தர்மராஜா திரௌபதி அம்மன் ஆலயத்தில் உள்ள ஸ்ரீ காயத்திரி காளியம்மனுக்கு ஆண்டு தோறும் ஆடி மாதம் காப்பு கட்டி திருநடன திருவிழா நடைபெறுவது வழக்கம், 

கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பேரிடர் காரணமாக திருவிழா நடைபெறாத நிலையில், இவ்வாண்டு இவ்விழா கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி ஞாயிறு அன்று காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது .

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஸ்ரீ காயத்திரி காளியம்மன் திருநடன திருவீதியுலா இன்று நாதஸ்வர மேளதாள மங்கல வாத்தியங்கள் முழங்க, திருக்கோயில் வளாகத்தில் இருந்து துவங்கியது, 

முன்னதாக ஏராளமான பெண்கள் தாய் வீட்டு சீதனமாக தேங்காய், பழங்கள், பூக்கள், பூ மாலைகள் கொண்ட வரிசை தட்டுக்கள் ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வந்தனர் தொடர்ந்து கோயிலில் இருந்து வெளியே வந்த காயத்திரி காளியம்மனை கோயில் சன்னதி முன்பு சுற்றிலும் கூடியிருந்த நூற்றுக்கணக்காண பெண்கள் உட்பட ஆயிரக்கணக்காண பக்தர்கள் நான்கு புறமும் சூழ்ந்து நின்று பூமாரி பொழிய, மலர் மாலைகள் அணிவித்தும், காளியம்மன் உற்சாகமாக வரவேற்க

லட்சுமி விலாஸ் தெரு, உப்புக்காரத்தெரு, ஆயிக்குளம் சாலை, ஹாஜியார் தெரு என நான்கு வீதி சந்திப்பில், திருநடனம் புரிந்தார், அப்போது, திருநடனம் புரிந்து வீதியுலாவாக வந்த ஸ்ரீ காயத்திரி காளியம்மனை ஏராளமானோர் தரிசனம் செய்தும், அவரிடம் பிராத்தனைகள் செய்தும் வழிபட்டு மகிழ்ந்தனர் .

தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 12ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை காயத்திரி ஜபம், மூலமந்திர ஜபமும், அதனை தொடர்ந்து பல்வேறு மூலிகை பொருட்களை கொண்டு ஸ்ரீ காயத்திரி ஹோமமும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடதக்கது.

கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.


Sponsor Ad
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

யூதர்கள் ஏன் இவ்வளவு கொடூரமானவர்கள் ? #worldnews #judaism #history

Sponsor Ad
தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

20 Most Awkward Red Carpet Moments

Sponsor Ad
விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

ஏ ஆர் ரகுமான் சூப்பர் ஹிட் பாடல்கள் | AR Rahman Super hit songs #arrahumansongs #songs

Sponsor Ad
விளையாட்டுகள்
மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Model fail Compilation | Happy Land

Sponsor Ad
விளையாட்டுகள்