ஐ எஃப் எஸ் எனப்படும் இன்டர்நேஷனல் பைனான்ஸ் லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தில் பொருளாதார குற்றப்பிரிவினர் சோதனை.குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 8 ஆயிரம் ரூபாய் வரை லாபம் அளிக்கப்படும் எனக் கூறி கடந்த ஏழு எட்டு வருடங்களாக வேலூர் மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் சுமார் 10,000 கோடிக்கும் மேல் முதலீடுகளை பெற்று பணத்தை திருப்பி தராததால் ( IFS சேர்மன் லட்சுமி நாராயணன்,  வேத நாராயணன் உள்ளிட்ட சகோதரர்கள் தலைமறைவான நிலையில்)  சுமார் 38 க்கும் மேற்பட்ட பல்வேறு பகுதிகளில் பொருளாதார குற்றப்பிரிவினர் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

காஞ்சிபுரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரை பிரபல பட்டு சேலை உற்பத்தியாளர்கள், சூப்பர் மார்க்கெட் ,  நகைக்கடை அதிபர்கள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்கள் இன்வெஸ்ட்மெண்ட் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏராளமான காவல்துறையினரும் IFS ல் முதலீடு செய்துள்ளனர். ஹேம்நாத் என்ற சிறப்பு காவல் உதவியாளர் வாலின்ட்டரி ரிட்டயர்மெண்ட் செய்துவிட்டு மீடியேட்டராக செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த வருடம் நமது செய்தியாளரின் முயற்சியால் 15 கோடி ரூபாய் வரை IFS ல் முதலீடு செய்த  காவல்துறையினர் பணத்தை திரும்ப பெற்றனர்.

இவர்களுக்கு  மீடியேட்டராக மின்மினி அச்சக உரிமையாளர் சரவணன், குளோப் ஸ்டுடியோ தனா, லஷ்மி நாராயணன் அவர்களின் உறவினர் ஜெகன், கண்டீஸ்வரர் கோவில் பகுதியை சார்ந்த ஹரிகிருஷ்ணன் ஆகியோர் செயல்பட்டுள்ளதாகவும் இவர்களின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட தரகர்கள் இயங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது.

பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனை செய்ய வருவதை கேள்விப்பட்ட முக்கிய மீடியட்டர்கள் தலைமறைவாகி  விட்ட காரணத்தினால் அதிகாரிகள் செய்வதறியாமல் வெகு நேரம் காத்துக் கொண்டிருந்தனர். பின்னர் மின்மினி அச்சகத்தின் உரிமையாளர் சரவணன் வீட்டை வீட்டை மட்டும் பூட்டி சீல் வைத்தனர். மேலும் இங்கு செயல்பட்டு வந்த அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதிக லாபம் கிடைக்கும் என எண்ணி பலர் கடன் வாங்கி முதலீடு செய்ததாகவும் தெரிய வருகிறது. காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் சுமார் 500 க்கும் மேற்பட்ட நடுத்தர குடும்பத்தினர் IFS நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து தற்போது கண்கலங்கி நிற்கின்றனர்.

காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்.


Sponsor Ad
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

எம்எல்ஏக்களின் சலுகைகள் இவ்வளவா !!!

Sponsor Ad
தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Ground Zero - The Deadly Shift Full Movie

Sponsor Ad
விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

கவியரசர் கண்ணதாசனின் தத்துவ பாடல்கள் | Kannadasan Songs #kannadasansongs #songs

Sponsor Ad
விளையாட்டுகள்
மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

தென்கச்சி சோ சாமிநாதன் அவர்களின் நகைச்சுவை பேச்சு | Thenkatchi Swaminathan comedy speech

Sponsor Ad
விளையாட்டுகள்