7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனையும் அபாயம் விவசாயிகள் வேதனை.குரல் தேர்வு


ஏரிகள் நிறைந்த மாவட்டமான காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மிக அதிக மழை பெய்ததின் காரணமாக விவசாயம் மூன்று போகம் விளைவிக்கப்பட்டது. 

தற்போது நவரை பருவம் விதைத்த விவசாயிகள் அறுவடை முடிந்து அந்த அந்த பகுதிகளில் அமைந்துள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில்  தங்களது நெல் மூட்டைகளை விற்பனை செய்து வருகின்றனர். 

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் கொட்டவாக்கம்  ஊராட்சியில் கடந்த ஏப்ரல் மாதம் 4 ந்தேதி அரசு நேரடி கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டது .

சுமார் 364 விவசாயிகள் இந்த அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில்  அறுவடை செய்த நெல்மணி களை விற்பனை செய்ய ஆன்லைன் மூலமாக பதிவு செய்து வருகின்றனர் .

குறிப்பாக புரிசை ,போந்தவாக்கம் வரதாபுரம், மூலப்பட்டு, கொட்டவாக்கம், வளத்தூர் போன்ற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தினம் தோறும் தங்களுடைய நெல்மணிகளை இந்த கொள்முதல் மையத்தில் விற்பனை செய்கின்றனர். 

அவ்வாறு விவசாயிகளிடமிருந்து  கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை எடுத்துச்செல்ல லாரிகள் தொடர்ச்சியாக வராததன் காரணமாக நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும்  வீணாகுகின்றது.

இது தொடர்பாக அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, எங்களைப்போன்ற விவசாயிகளிடம் இருந்து சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை அரசு கொள்முதல் செய்துள்ளது. 

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு எடுத்துச்செல்ல கடந்த 3 நாட்களாக  லாரிகள் வராததால் சுமார் 7ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் இந்த கோடை மழையில் நனைந்து சேதமடையும் வாய்ப்பு உள்ளது என வேதனையுடன் தெரிவித்தனர் .

எனவே நுகர்பொருள் வாணிப கழகம் உடனடியாக லாரிகளை அனுப்பி அங்கு தேங்கி நிற்கும்  நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்தில் இருந்து எடுத்துச் செல்லுமாறு விவசாயிகள்  வேண்டுகோள் விடுத்தனர்.

காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்.


Reaction :
Sponsor Ad


இந்தியா
© THE GREAT INDIA NEWS

குறைகிறது பெட்ரோல் மற்றும் டீசல் விலை.!

திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

புரூஸ்லீயின் அதிரடி சண்டைக் காட்சி திரைப்படம் | Bruce Lee's action fight movie

Sponsor Ad
தமிழ்நாடு
© THE GREAT INDIA NEWS

மீதி 6 பேரும் விடுதலை முயற்சிகள் துரிதம்.

திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

டவுரி கல்யாணம் திரைப்படம் | Dowry Kalyanam Full Movie | #visu #vijayakanth #tamilmovies #movies

Sponsor Ad
விளையாட்டுகள்
சென்னை
© THE GREAT INDIA NEWS

மீண்டும் புத்துயிர் பெறுகிறது மதுரவாயல் - சென்னை துறைமுகம் !!!

திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

காட் ஆப் தண்டர் vs வைக்கிங் ஹாலிவுட் திரைப்படம் | God Of Thunder vs Vikings Hollywood Cinema in Tamil

Sponsor Ad
விளையாட்டுகள்
மாவட்டம்
© THE GREAT INDIA NEWS

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு - 4 ஆம் ஆண்டு நினைவுதினத்தில் வெளிமாவட்டத்தினர் கலந்துக்கொள்ள அனுமதியில்லை !

திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Top 10 Braless Movie Scenes I The Top 10

Sponsor Ad
விளையாட்டுகள்
புதுச்சேரி
© THE GREAT INDIA NEWS

விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 12 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர்.

திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

புதுப்பேட்டை சூப்பர் ஹிட் காட்சி | Pudupettai Best Scene

Sponsor Ad