கும்பகோணத்தில் 200 ஆண்டுகள் பழமையான மௌனசாமி மடத்தின் உலோக சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் மீட்டனர்.குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்

கும்பகோணத்தில் 200 ஆண்டுகள் பழமையான மௌனசாமி மடத்தின் நிர்வாகிகள் பழங்காலத்து உலோக சிலைகளை பதுக்கி வைத்திருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா மாநில பொதுச் செயலாளர் பாலா மற்றும் இந்து அமைப்பினர் அண்மையில் புகார் அளித்திருந்தனர்.

புகாரின் பேரில் இந்த சிலைகளை கண்டுபிடிக்க சிலை தடுப்பு காவல் ஆய்வாளர் இந்திரா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவுகளுடன் இன்று காலை அந்த மடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது, அங்கு பதுக்கி வைத்திருந்த சிலைகள் குறித்து உரிய ஆவணங்களை கேட்டபோது, அங்கிருந்த நிர்வாகி வைத்தியநாதன் சமர்ப்பிக்கவில்லை. 

இதனையடுத்து, உலோக சிலைகளான 23 செ.மீ. உயரமும், 12.5 செ.மீ. அகலமும் கொண்ட நடராஜர் சிலை, 14 செ.மீ. உயரமும், 5 செ.மீ. அகலமும் கொண்ட திருவாச்சியுடன் கூடிய சிவகாமிதேவி சிலை, 11 செ.மீ. உயரமும், 8.5 செ.மீ. அகலமும் கொண்ட திருவாச்சி மற்றும் பீடமும் கொண்ட விநாயகர் சிலை, 37 செ.மீ. உயரமும், 16 செ.மீ. அகலமும் கொண்ட பாலதண்டாயுதபாணி சிலை, 144 செ.மீ. உயரமும், 115 அகலமும் கொண்ட 63 நாயன்மார்களின் சிலையும் தஞ்சை லீலா ஓவியங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டது. 

இச்சிலைகள் மற்றும் ஓவியத்தை,  நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த சிலைகள் எந்தக் கோவிலில்லிருந்து திருடப்பட்டது என அறநிலையத்துறையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. 

கும்பகோணம் மாவட்ட செய்தியாளர் ரமேஷ்.
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

எஸ் பி பி யின் சிறந்த 50 பாடல்கள் | SPB Songs #spbsongs #songs

தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

பள்ளியில் நடந்த கொடுரம் | 215 school students dead

விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Chuck & Sarah 4x02 End Scene

மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

திருவள்ளுவர் பற்றி அதிசயம் ! Thiruvalluvar, thiruvalluvar history, about thirukural,