உளுந்தூர்பேட்டையில் படிப்பிற்காக உதவி கேட்ட வசந்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்; உடனடியாக நிதி உதவி அளித்த செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர்.குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த கோ.பவளங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் இவருக்கு திருமணம் ஆகி நான்கு பெண் குழந்தைகள் உள்ளது , இந்த நிலையில் இவரது முதல் மகளுக்கு திருமணம் செய்து கொடுத்த நிலையில் இவரது இரண்டாவது மகள் வசந்தி என்பவர் வடலூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார், 

இவர்களுடைய தாய் தந்தை உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே விவசாயம் செய்து வருகின்றனர், மிகவும் வறுமையான குடும்பத்தில் வசந்தி பிறந்துள்ளதால் சிறுவயதிலிருந்தே படிப்பிற்காகவும் அத்தியாவசிய தேவைக்காகவும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளார், 

மேலும் தாய் தந்தை படும் கஷ்டத்தை போக்குவதற்காக கல்லூரி முடித்துவிட்டு இரவு நேரங்களில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பாதம், பிஸ்தா உள்ளிட்ட பொருட்களை விற்று அதன் மூலம் வரும் வருமானத்தை கல்லூரி படிப்பிற்கும் தனது இதர செலவுகளுக்கும் பயன்படுத்திக் கொள்கிறார், 

இந்த நிலையில் வசந்தியின் உதவி கேட்கும் சமீபத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது, இதனையடுத்து விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் வசந்தி மற்றும் அவரது தந்தை சண்முகம் ஆகியோரை நேரடியாக அழைத்து வசந்தியின் படிப்பிற்காக உதவுவதாக உறுதியளித்தார், 

மேலும் உடனே இந்த ஆண்டு செலுத்த வேண்டிய கல்லூரி கட்டணமான ரூபாய் 22500 வசந்தியிடம் வழங்கினார், மேலும் படிப்பதில் கவனம் செலுத்துங்கள் படிப்பு தான் தங்களுக்கு எதிர்காலத்தில் உதவும் தாய் தந்தையின் கஷ்டத்தை போக்க நினைப்பது சரிதான் அதற்காக நீங்கள் படிப்பில் கவனம் செலுத்தினாலும் வருங்காலத்தில் அவர்களை நன்றாக பார்த்துக் கொள்ள முடியும் எனவே படிப்பில் கவனம் செலுத்துங்கள்.

படிப்பிற்காக எந்த உதவி உங்களுக்கு தேவைப்பட்டாலும் என்னை அழையுங்கள் என்று தனது தொலைபேசி எண்ணையும் கொடுத்து அனுப்பினார் , செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவரின் இத்தகைய செயல் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது மேலும் நெட்டிசன்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் ஆதி சுரேஷ்.
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

புரூஸ்லீயின் அதிரடி சண்டைக் காட்சி திரைப்படம் | Bruce Lee's action fight movie

தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

கொரோனாவின் விழிப்புணர்வு - வீடியோ,awarness video, awarness video in tamil,covid

விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

ஜுராசிக் தண்டர் தமிழ் திரைப்படம் | Jurassic Thunder Hollywood Movie | Tamil Dubbed Movie | #tamilmovie #tamildubbedmovies #movies

மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

தி ஓஸ்ட் சைனீஸ் டப்பிங் திரைப்படம் | The Host Tamil Dubbed Full movie | Oscar Winner Film #dubbedmovies #movies #tamilmovies