நாகை அருகே கடந்த 2011-ம் ஆண்டு அடிதடி புகாரில் பெயரை நீக்க லஞ்சம் கேட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை.குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்

நாகை மாவட்டம், கீழையூரை சேர்ந்தவர் பிரபு. இவர் கடந்த 2011-ம் ஆண்டு ஒரு அடிதடி புகாரில் தன் உறவினரின் பெயரை நீக்க வேண்டும் என்று கீழையூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சிவானந்தத்திடம் கூறினார். 

அதற்கு சிவானந்தம் ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அவருக்கு லஞ்சம் தர விரும்பாத பிரபு, இது குறித்து நாகை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளித்தார். 

புகாரின்பேரில், லஞ்ச ஒழிப்பு போலீஸார் கொடுத்த அறிவுரையின் பேரில் பிரபு, ரசாயன பொடி தடவிய ரூ.3 ஆயிரத்திற்கான பணத்தை சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சிவானந்தத்திடம் கொடுத்தார். 

அதை சிவானந்தம் வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் சிவானந்தத்தை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு நாகை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 

வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகா, சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சிவானந்தத்திற்கு 1988 பிரிவு 7-ன்கீழ் (லஞ்சம் கேட்பது), ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனையும், 

ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 13 (2) (லஞ்சம் கேட்டு பெறுவது), 13 (1) (d) (அரசு பணியை துஷ்பிரயோகம் செய்தல்) விதித்தும். தண்டனைகளை ஏககாலத்தில் அனுப்பவிக்கவும்  தீர்ப்பளித்தார்.

நாகை மாவட்ட செய்தியாளர் சீனிவாசன்.
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

டிராகன் அண்டர் தமிழ் திரைப்படம் | Dragon Hunter Full Movie

தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

ஹேர் பட் தமிழ் டப்பிங் திரைப்படம் | Hair Bud Hollywood Movie | #tamilmovies #movies #dubbedmovies

விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

கவன் திரைப்படத்தின் சூப்பர் ஹிட் காட்சி | Kavan Super Hit Scenes

மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

கவுண்டமணி செந்தில் சிறப்பு காமெடி | Goundamani Senthil Super Comedy