• முகப்பு
  • தமிழ்நாடு
  • நிலம் வீடு வாங்குவோருக்கு சொத்துக்களின் வழிகாட்டி மதிப்பு.. உயர் நீதிமன்றம் சூப்பர் உத்தரவு.

நிலம் வீடு வாங்குவோருக்கு சொத்துக்களின் வழிகாட்டி மதிப்பு.. உயர் நீதிமன்றம் சூப்பர் உத்தரவு.

பரணி

UPDATED: Mar 7, 2024, 7:39:39 PM

பத்திரப்பதிவுத் துறையில் சொத்துக்களுக்கான வழிகாட்டி மதிப்பை உயர்த்தி கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் 30 அன்று தமிழக அரசு வெளியிட்ட சுற்றறிக்கை செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

இந்த தீர்ப்பின் காரணமாக 2017ம் ஆண்டுக்கான வழிகாட்டி மதிப்பை தான் கண்டிப்பாக அரசு பின்பற்றியாக வேண்டும்.

Also Read : போக்சோ வழக்கில் கைதாகி தப்பித்த நிலையில் 4 மாதங்களுக்கு பிறகு டீ மாஸ்டர் கைது.

வீடு நிலம் வாங்குவோருக்கு பெரிய நல்ல செய்தியாகும் பத்திரப்பதிவுத் துறை தலைவர் தலைமையில் தமிழகத்தில் சொத்துக்களுக்கான வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்க மாநில அளவிலான மதிப்பீட்டுக் குழு இயங்கி வருகிறது.

இந்த குழு தான் மாநிலத்தில் சந்தை வழிகாட்டி மதிப்பிற்கு ஏற்ப, சொத்துக்களின் வழிகாட்டி மதிப்பை உயர்த்தும். அந்த வகையில் கடந்த 2012ம் ஆண்டு வழிகாட்டி மதிப்பினை தமிழக அரசு நிர்ணயம் செய்தது.Also Read  : நாசர் தொகுதியில் உள்ள ஊராட்சிகளுக்கு அதிக நிதி வருகிறது பெரிய இடத்து தொகுதி என்பதால் நாங்கள் கண்டு கொள்வதில்லை - திமுக எம்எல்ஏ.

இதனிடையே பலரும் சொத்து வழிகாட்டி மதிப்பு சந்தை மதிப்பை விட அதிகமாக இருப்பதாக குற்றம்சாட்டி வந்ததால், கடந்த 2017ம் ஆண்டு 33 சதவீதம் வழிகாட்டி மதிப்பீடு குறைக்கப்பட்டது.

மதிப்பீட்டை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்தது.. ஆனால் மதிப்பீட்டுக் குழு, வழிகாட்டி மதிப்பீட்டை நிர்ணயிக்க வேண்டும் என்றால், ஒவ்வொரு பகுதியையும் ஆய்வு செய்து நிர்ணயம் செய்ய வேண்டும்.

Also Read : ரூ.108 கோடி போதைப் பொருட்கள் பரிமுதல் கைதான பாம்பணை சேர்ந்த 4 பேரிடம் தீவிர விசாரணை.

அதற்கு கால அவகாசம் வேண்டும் என்பதால், கடைசியாக நிர்ணயிக்கப்பட்ட 2012ம் ஆண்டு வழிகாட்டி மதிப்பீட்டை பின்பற்ற வேண்டும் என அரசு அறிவித்தது.

அதாவது 2017ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் தேதி வரை அமலில் இருந்த வழிகாட்டி மதிப்பீடு அடிப்படையில் புதிய மதிப்பீட்டை நிர்ணயித்து 2023 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருமென 2023 மார்ச் 30ஆம் தேதி சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டது.

Also Read : கன்னியாகுமரி ஆரல்வாய்மொழியில் ரயில் பாதை பணியினால் இறந்தவர் உடலை அடக்க செய்வதிலும் மக்கள் அவதி.

இதை எதிர்த்து கிரடாய் மற்றும் 3 கட்டுமான நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விதிகளின்படி துணைக் குழுக்கள் அமைத்து, அறிக்கைகள் பெற்று, அவற்றை ஆய்வுசெய்து, பொதுமக்கள் கருத்துகளை பெற்று அதன் பிறகே வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்க முடியும் என்ற சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனக் கூறி, சுற்றறிக்கையை ரத்துசெய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அமர்வு, தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

Also Read : சமூக வலைத்தளங்களில் தமிழக அரசு வருங்கால தலைமுறைகளை சிதைக்கும் கொடுமை எனக் கூறிய  பாஜக பெண் நிர்வாகி சென்னையில் கைது.

எனினும் வழக்கு தொடந்து பிறப்பித்த தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்ததுடன், சுற்றறிக்கையை ரத்து செய்துள்ளது.. அதேநேரம் சட்ட விதிகளை பின்பற்றி வழிகாட்டி மதிப்பீட்டை மாற்றியமைக்கும் வரை, கடந்த 2017ம் ஆண்டின் வழிகாட்டி மதிப்பீட்டையே பின்பற்ற வேண்டும் என அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் 2023 மார்ச்சுக்கு பின், இதுவரை பதிவு செய்த ஆவணங்களுக்கு மட்டும் விலக்களிக்கப்படுவதாகவும், தொடர்ந்து 2023 மார்ச் சுற்றறிக்கையின் அடிப்படையில் முத்திரைத்தாள் கட்டணத்தை திருப்பி அளிக்கும்படி எவரும் கோர முடியாது என்றும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

Also Read : 10 ஆண்டுக்கும் மேலாக அடிப்படை வசதி இல்லாமல் உள்ள மயானத்திற்கு மக்கள் அவதி.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவு காரணமாக இனி அரசு கண்டிப்பாக 2017ம் ஆண்டு இருந்த வழிகாட்டி மதிப்பின்படி தான் முத்திரைத்தாள் கட்டணம் வசூலித்து பத்திரங்களை பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அப்படி பதிவு செய்தால், இப்போது உள்ளதைவிட கணிசமாக தொகை பத்திரப்பதிவில் மிச்சமாகும் என்பதால் ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

VIDEOS

Recommended