- முகப்பு
- மாவட்டச் செய்தி
- சமூக வலைத்தளங்களில் தமிழக அரசு வருங்கால தலைமுறைகளை சிதைக்கும் கொடுமை எனக் கூறிய பாஜக பெண் நிர்வாகி சென்னையில் கைது
சமூக வலைத்தளங்களில் தமிழக அரசு வருங்கால தலைமுறைகளை சிதைக்கும் கொடுமை எனக் கூறிய பாஜக பெண் நிர்வாகி சென்னையில் கைது
JK
UPDATED: Mar 6, 2024, 8:44:23 PM
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அருண் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சவுதாமணி என்பவர் அவரது @sowdhamani (மோடியின் குடும்பம்) என்ற X-தள கணக்கில், 'மனது வலிக்கிறது.
வருங்கால இந்தியாவின் தூண்கள் இப்படி அலங்கோலப்பட்டு கிடக்கிறது/ திராவிட மாடல் இந்த வருங்கால தலைமுறையின் எதிர்காலத்தை சிதைக்கும் கொடுமைகளைத் தானே செய்கிறது.
Also Read : நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தின் கட்டாய கட்டண வசூலை தடுத்திட வேண்டும்.
மது, கஞ்சா திராவிட ஆட்சி தமிழகத்திற்கு சாபக்கேடு' என்று பதிவிட்டு அதனுடன் ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் சுமார் 15வயது மதிக்கத்தக்க 3பள்ளி மாணவிகள், சீருடையுடன் கையில் பாட்டிலில் மது போன்ற பானத்தை வைத்து குடிப்பது போன்று வீடியோ பதிவு உள்ளது.
அவ்வீடியோ பதிவை. 04.03.2024-ம் தேதி மாலை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை பார்க்கும் போது. யாரோ மேற்படி திரவத்தை கொடுத்து, குடிக்க சொல்லி வீடியோ எடுத்து, அந்த பதிவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளதாகவும், இவ்வாறாக சமுதாயத்தை சீர்கெடுக்கும் விதமாகவும். குழந்தைகளை அச்சுறுத்தும் விதமாகவும், அரசுக்கும், அரசு பள்ளிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தோடும்.
Also Read : கன்னியாகுமரி ஆரல்வாய்மொழியில் ரயில் பாதை பணியினால் இறந்தவர் உடலை அடக்க செய்வதிலும் மக்கள் அவதி.
பொது அமைதியை கெடுக்கும் விதமாகவும் மேற்படி வீடியோ மற்றும் பதிவு உள்ளதாகவும். ஏதோ உள்நோக்கத்துடன் வதந்தியை பரப்பியும், குழந்தைகள் சம்மந்தப்பட்ட இதுபோன்ற செய்தியை சமூக வலைத்தளங்கள். ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்களில் வெளியிடுவது சட்டபடி குற்றம் என தெரிந்தும் மேற்படி வீடியோவை @sowdhamani7 என்ற ID மூலமாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார்.
மேற்படி சவுதாமணி என்பவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கொடுத்த புகாரின் பேரில் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து சென்னையில் இன்று காலை கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அவர் திருச்சி ஜே எம் 3 நீதிமன்றத்தில் நீதிபதி பாலாஜி முன்பு நேர் நிறுத்தப்பட்டார்.
நீதிமன்றத்திற்கு அவரை கொண்டு வந்த பொழுது அவர் மதுவால் பெண்கள் பெண் குழந்தைகள் வாழ்க்கை சீரழிக்கும் இந்த ஆட்சி ஒழியட்டும்,
Also Watch : 50 ஆயிரம் நன்கொடை கேட்டு தொல்லை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி கும்பல்,
மதுவால் பெண்களின் தாலி அறுக்கும் இந்த ஆட்சி ஒழியட்டும், போதை கடத்துபவர்களுக்கு புகழை கொடுத்து கட்சியில் பதவி கொடுக்கும் இந்த ஆட்சி ஒழியட்டும், தமிழகத்தில் பெண்கள் வாழ வழி இல்லாமல் நடத்தும் இந்த ஆட்சி ஒழியட்டும், கொடுங்கோல் திராவிட ஆட்சி ஒழியட்டும் என என்று சபதமிட்டுக்கொண்டே நீதிமன்றத்திற்குள் நுழைந்தார்.
Also Read : திமுக கிளை செயலாளருமான தயாளன் என்பவரின் காதை கடித்து தனியாக எடுத்த தந்தை மகன்.
தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட நீதிபதி அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். 4வாரம் திங்கட்கிழமை தோறும் திருச்சி நீதிமன்ற காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டார்.
இவர் மீது சென்னையில் இதே போல் அவதூறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
Also Read : புதுச்சேரி மாணவி ஆர்த்தி கொலைக்கு நியாயம் கேட்டு பெண்கள் சட்டமன்றத்தை முற்றுகை.
சவுதாமணி சென்னையில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார்.