நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தின் கட்டாய கட்டண வசூலை தடுத்திட வேண்டும்.

முகேஷ்

UPDATED: Mar 6, 2024, 7:38:15 PM

நாகர்கோவில் அண்ணா  விளையாட்டரங்கில் சமீபகாலமாக பயிற்சிக்கு வரும் விளையாட்டு வீரர் வீராங்கனைகளிடம் நிர்வாகம் கட்டாய வசூலில் ஈடுபடுகிறது.

இதனை தடுத்து நிறுத்தகோரி மாவட்ட நிர்வாகத்துக்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில துணை தலைவர் சோ.சுரேஷ் விடுத்துள்ள கோரிக்கையில் கூறி இருப்பதாவது.

Also Read : திமுக கிளை செயலாளருமான தயாளன் என்பவரின் காதை கடித்து தனியாக எடுத்த தந்தை மகன்.

அண்ணா விளையாட்டு அரங்கத்தில் பயிற்சிக்கு வரும் குழந்தைகள் முதல் பல பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் திறமை இருந்தும் பயிற்சிக்கு வர பேருந்து கட்டணத்திற்கே வசதி இன்றி தவிக்கும் நிலையில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் ஒவ்வொரு விளையாட்டிற்கும் தனி தனியாக கட்டணம் செலுத்த தினமும் வாசலிலும் பயிற்சி செய்யும் பகுதிகளுக்கும் தேடி சென்று இடைமறித்து ஒவ்வொருவரையும் நிர்வாகத்தால் கட்டணம் செலுத்த நிர்ப்பந்தித்து வருவதால் பலர் விளையாட்டு அரங்கத்திற்கு வருவதை தவிர்க்க தொடங்கி உள்ளனர்.Also Read : புதுச்சேரியில் படுகொலை செய்யப்பட்ட மாணவி ஆர்த்தியின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு.

இதனால் பல திறமையான விளையாட்டு வீரர், வீராங்கனைகள் உருவாவது தடுக்கப்படுகிறது. பலருக்கு பயிற்சிக்கு வர மன உழைச்சலை ஏற்படுத்துகிறது. தமிழ்நாடு அரசு சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளை திறம்பட நடத்தி தேசத்திற்கே முன்மாதிரியாக விளங்கும் வேளையில் மாவட்ட விளையாட்டு நிர்வாகத்தின் இந்த வசூல் பணியானது தமிழக அரசிற்கு பொதுமக்கள் மத்தியில் அவப்பெயரை ஏற்படுத்துவதாக உள்ளது.

Also Read : காங்கிரஸ் ஓட்டை வாங்கியா ஜெயிச்ச? திமுக ஓட்டில்தான ஜெயிச்ச... மயிலாடுதுறை காங்கிரஸ் எம்எல்ஏவை சரமாரியாக கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக நகராட்சி தலைவர்.

ஆகையால் விளையாட்டு அரங்கத்தில் பயிற்சி மேற்கொள்ள வரும் எழை பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு தடையாக இருக்கும் கட்டாய கட்டண வசூலை தடை செய்ய வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்தை தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் கேட்டு கொள்கிறேன்.

Also Read : கன்னியாகுமரி ஆரல்வாய்மொழியில் ரயில் பாதை பணியினால் இறந்தவர் உடலை அடக்க செய்வதிலும் மக்கள் அவதி.

VIDEOS

RELATED NEWS

Recommended