திமுக கிளை செயலாளருமான தயாளன் என்பவரின் காதை கடித்து தனியாக எடுத்த தந்தை மகன்.

ராஜ்குமார்

UPDATED: Mar 6, 2024, 7:32:05 AM

திருவள்ளூர், மார்ச் 6- திருவள்ளூர் ஒன்றியம், தண்ணீர்குளம் ஊராட்சி தலைவராக இருப்பவர் தேவிகா. இவரது கணவர் தயாளன் இவர் தண்ணீர்குளம் திமுக கிளைச் செயலாளராக உள்ளார். 

இந்நிலையில் ஊராட்சிக்குட்பட்ட குறிஞ்சி சிபிஎஸ்இ பள்ளி அருகில் 12 அடி சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதனை தயாளன் பார்வையிட்டுக் கொண்டு இருந்தார். 

Also Watch : 50 ஆயிரம் நன்கொடை கேட்டு தொல்லை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி கும்பல்,

அப்போது தண்ணீர்குளம் ஊராட்சி கணபதி நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மகாலிங்கம் (42) என்பவர் ஆட்டோவை வீட்டிலிருந்து சாலையில் ஏறும் வகையில் சாலையை சரிவாக அமைக்கும் படி கேட்டுள்ளார். அப்போது ஊராட்சி தலைவரின் கணவர் தயாளன் அப்படியெல்லாம் செய்ய முடியாது என கூறியதாக தெரிகிறது. 

Also Watch : நடிகர் சிவகார்த்தி கேயனுடன் இணைந்து புதிய படம் பண்ணுவதாக தெரிவித்தார் - விஜய் தேவர் கொண்டா

இதனால் ஆத்திரமடைந்த மகாலிங்கம் மற்றும் அவரது தந்தை மாரி (73) ஆகியோர் தயளனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வாக்குவாதம் முற்றிய நிலையில் மகாலிங்கம் என்பவர் தயாளனின் இடது புற காதை கடித்ததில் காது தனியாக வந்து விட்டது.

Also Read : தமிழகத்தில் பாஜகவிற்கு ஆதரவு பெருகுவதால் சிலருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது!” – பிரதமர் நரேந்திர மோடி

இதனையடுத்து உடனடியாக அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். 

Also Read : ஒன்றிய மோடி அரசு விஞ்ஞான முறையில் ஒவ்வொரு குடும்பத்திலும் தினந்தோறும் 100 ரூபாய் கொள்ளை அடிக்கிறது

இது குறித்து ஊராட்சி தலவைர் தேவிகாவின் மகன் தியாகு செவ்வாப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் காதை கடித்து தனியாக எடுத்த மகாலிங்கம் மற்றும் அவரது தந்தை மாரி ஆகிய 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.

Also Watch : குன்றத்தூர் அருகே புது வீட்டிற்குள் புகுந்து படம் எடுத்து ஆடிய நல்ல பாம்பு

VIDEOS

RELATED NEWS

Recommended