- முகப்பு
- புதுச்சேரி
- புதுச்சேரி மாணவி ஆர்த்தி கொலைக்கு நியாயம் கேட்டு பெண்கள் சட்டமன்றத்தை முற்றுகை
புதுச்சேரி மாணவி ஆர்த்தி கொலைக்கு நியாயம் கேட்டு பெண்கள் சட்டமன்றத்தை முற்றுகை
சக்திவேல்
UPDATED: Mar 6, 2024, 11:37:41 AM
புதுச்சேரி முத்தியால்பேட்டை மாணவி ஆர்த்தி கொலைக்கு நியாயம் கேட்டு புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் புதுச்சேரி சட்டமன்றம் முன்பு ஒன்று திரண்ட பெண்கள் சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர் .
Also Read : திமுக கிளை செயலாளருமான தயாளன் என்பவரின் காதை கடித்து தனியாக எடுத்த தந்தை மகன்.
போராட்டத்தின் போது முதலமைச்சர் காரில் வரும் பொழுது காரை நோக்கி கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை அடுத்து சட்டமன்ற முன்பு திரண்ட பெண்களை போலீசார் அப்புறப்படுத்தும் முயன்ற போது போலீசாருக்கும் பெண்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
Also Watch : 50 ஆயிரம் நன்கொடை கேட்டு தொல்லை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி கும்பல்,
மேலும் பல்வேறு இடங்களில் மாணவி கொலைக்கு நியாயம் கேட்டு போராட்டம் நடந்து வருவதால் புதுச்சேரியில் பதட்டமான சூழ்நிலை உருவாகி உள்ளது.
இதனை அடுத்து காவல்துறை தலைவரை நேரில் அழைத்த முதலமைச்சர் ரங்கசாமி அவருடன் அவசரமாக ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Also Read : தமிழகத்தில் பாஜகவிற்கு ஆதரவு பெருகுவதால் சிலருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது!” – பிரதமர் நரேந்திர மோடி