• முகப்பு
  • குற்றம்
  • ரூ.108 கோடி போதைப் பொருட்கள் பரிமுதல் கைதான பாம்பணை சேர்ந்த 4 பேரிடம் தீவிர விசாரணை .

ரூ.108 கோடி போதைப் பொருட்கள் பரிமுதல் கைதான பாம்பணை சேர்ந்த 4 பேரிடம் தீவிர விசாரணை .

கார்மேகம்

UPDATED: Mar 7, 2024, 7:02:41 AM

ரூ.108 கோடி போதைப் பொருட்கள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட பாம்பணை சேர்ந்த 4 பேரிடம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read : சமூக வலைத்தளங்களில் தமிழக அரசு வருங்கால தலைமுறைகளை சிதைக்கும் கொடுமை எனக் கூறிய  பாஜக பெண் நிர்வாகி சென்னையில் கைது.

ராமேஸ்வரம் தனுஷ்கோடி கடல் வழியாக பைபர் படகு மூலமாக இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் ரூ.108 கோடி மதிப்புள்ள  99 கிலோ போதைப் பொருட்களை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இந்திய கடலோர காவல் படையினருடன் இணைந்து பறிமுதல் செய்தனர்.

Also Read : கன்னியாகுமரி ஆரல்வாய்மொழியில் ரயில் பாதை பணியினால் இறந்தவர் உடலை அடக்க செய்வதிலும் மக்கள் அவதி.

இது தொடர்பாக பாம்பன் அக்காள் மடத்தை சேர்ந்த ரெமிஸ்டன், பிரதாப், ஜான்சன்‌, ரெபிஸ்டன் ஆகிய 4 பேரையும் கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read : காங்கிரஸ் ஓட்டை வாங்கியா ஜெயிச்ச? திமுக ஓட்டில்தான ஜெயிச்ச... மயிலாடுதுறை காங்கிரஸ் எம்எல்ஏவை சரமாரியாக கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக நகராட்சி தலைவர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இந்த போதைப் பொருட்களை அவர்கள் எங்கிருந்து வாங்கி வந்தார்கள் இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா ? போன்ற பல்வேறு கோணங்களில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read : பாபநாசம் அருகே  திருமணம் முடிந்து, குழந்தையை தோளில் சுமந்தவாறு, கல்லூரிக்கு வருகை புரிந்து பட்ட படிப்பு பயிலும் நரிக்குறவர் இன சமூகப் பெண்மணி.

தொடர்ந்து கைது செய்யப்பட்ட 4 பேரையும் நேற்று இரவு ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரைக்கு அழைத்து சென்றனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended