பாபநாசம் அருகே திருமணம் முடிந்து, குழந்தையை தோளில் சுமந்தவாறு, கல்லூரிக்கு வருகை புரிந்து பட்ட படிப்பு பயிலும் நரிக்குறவர் இன சமூகப் பெண்மணி.
ஆர்.தீனதயாளன்
UPDATED: Mar 6, 2024, 9:07:39 PM
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருவலஞ்சுழி ஏழுமாந்திடல் பகுதியில் வசித்து வருபவர்கள் சந்தியா (23), சுரேஷ் (24) தம்பதியினர். இவர்களுக்கு விஷ்ணு என்ற 11-மாதம் ஆண் குழந்தை உள்ளது. இவர்கள் நரிக்குறவர் இன சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். கணவர் சுரேஷ் பி.ஏ.எக்கனாமிக் படித்துள்ளார்.
தொடர்ந்து திருவிழா மற்றும் விசேஷ நேரங்களில் பாசிமாலை, பவளம் மற்றும் பலூன்கள் போன்ற பொருட்களை விற்பனை செய்து குடும்பம் நடத்தி வருகின்றார்.
Also Watch : 50 ஆயிரம் நன்கொடை கேட்டு தொல்லை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி கும்பல்,
இவர் பட்டப்படிப்பு முடித்துள்ள நிலையில், தனது மனைவி சந்தியாவும் (பி.ஏ தமிழ்) படித்து முடிவடைந்த நிலையில், தொடர்ந்து மனைவியை மேற்படிப்பு படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டையில் அமைந்துள்ள ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரியில் சேர்த்து பி.எட். இரண்டாம் ஆண்டு மேற்படிப்பை படிக்க வைத்துள்ளார்.
Also Read : கன்னியாகுமரி ஆரல்வாய்மொழியில் ரயில் பாதை பணியினால் இறந்தவர் உடலை அடக்க செய்வதிலும் மக்கள் அவதி.
தினசரி திருவலஞ்சுழியில் இருந்து அய்யம்பேட்டைக்கு சந்தியா, தனது 11-மாத கைக் குழந்தையான விஷ்ணுவை தோளில் சுமந்தபடி கல்வி பயில வருவது காண்போரை நெகிழ வைத்துள்ளது.
மாலை நேரங்களில் ஏழுமாந்திடல் பகுதியில் அமைந்துள்ள, தனது இல்லத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு, தமிழக அரசின் இல்லம் தேடிக் கல்வியை பயின்று கொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.