- முகப்பு
- மாவட்டச் செய்தி
- 10 ஆண்டுக்கும் மேலாக அடிப்படை வசதி இல்லாமல் உள்ள மயானத்திற்கு மக்கள் அவதி.
10 ஆண்டுக்கும் மேலாக அடிப்படை வசதி இல்லாமல் உள்ள மயானத்திற்கு மக்கள் அவதி.
பரணி
UPDATED: Mar 7, 2024, 7:20:34 PM
சோளிங்கர் அடுத்த வெங்கப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட கங்காபுரத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்
இந்த கிராமத்திற்கு நந்தியாறு அருகே மயானம் உள்ளது இங்கு முட்புதார்கள் அதிகமாக இருப்பாதால் இறுதி சடங்கு செய்ய தண்ணீர் இல்லாமல் அவதிபடுகிறார்கள்
இங்குள்ள ஆழ்துளை கிணறு குழாய் பழுதாகி உள்ளது எனவே 10 ஆண்டுக்கும் மேலாக பழுதடைந்துள்ள ஆழ்துளை குழாய் கிணற்றை சரி செய்து மின்மோட்டார் குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும்.
Also Read : போக்சோ வழக்கில் கைதாகி தப்பித்த நிலையில் 4 மாதங்களுக்கு பிறகு டீ மாஸ்டர் கைது.
மயானத்திற்கு சுற்றுசுவர் அமைத்து தர வேண்டும் கங்காபுரம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பகுதியில் இருந்து மயானத்துக்கு தார் சாலை அமைக்க வேண்டும் என பொது மக்கள் சமுக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
Also Read : ரூ.108 கோடி போதைப் பொருட்கள் பரிமுதல் கைதான பாம்பணை சேர்ந்த 4 பேரிடம் தீவிர விசாரணை.
அனால் இது வரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை எனவே அதிகாரிகள் உடனடியாக அப்பகுதியை ஆய்வு செய்து மயானத்துக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர்.
Also Read : கன்னியாகுமரி ஆரல்வாய்மொழியில் ரயில் பாதை பணியினால் இறந்தவர் உடலை அடக்க செய்வதிலும் மக்கள் அவதி.