• முகப்பு
  • aanmegam
  • திருக்கழுக்குன்றம் வேதகீரிஸ்வரர் கோவில் தேர் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வருகிறது.

திருக்கழுக்குன்றம் வேதகீரிஸ்வரர் கோவில் தேர் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வருகிறது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரர் உடன் உரை அருள்மிகு திருப்புரசுந்தரி அம்மன் திருகோவிலின், சித்திரை பிரம்மோற்சவ தேர் திருவிழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் திருக்கழுக்குன்றமே திணறியது.பக்தர்கள் வெள்ளத்தில் தேர் மிதந்து வந்தது. தொண்டை மண்டலத்தில், 28 வது பெரிய சிவஸ்தலமாகவும், சைவகுரவர்கள் நால்வரால் பாடல்பெற்ற தலமாகவும், வேதமலையாகவும் திருக்கழுக்குன்றம் விளங்குகிறது. இங்கு மலைக்குன்றின் மேல் வேதகிரீஸ்வரர் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இச்சிறப்பு மிக்க திருக்கழுக்குன்றத்தில் சித்திரை பிரம்மோற்சவ பெருவிழா, ஆண்டுதோறும் விமர்சையாக நடைபெற்று வருகிறது. விநாயகர் தேர். வேதகிரீஸ்வரர் தேர். அருள்மிகு திருபுரசுந்தரி அம்மன் தேர்ரையும் அதனைத் தொடர்ந்து மற்ற தேர்களையும் பக்தர்கள் பெருந்திரளாக கலந்துக் கொண்டு வடங்களை பக்தியுடன் பிடித்து இழுத்து வந்தனர். காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்.

VIDEOS

RELATED NEWS

Recommended