• முகப்பு
  • tamilnadu
  • குரூப் 2 தேர்வில் முறைகேடு நடப்பதற்கு வாய்ப்பே இல்லை !

குரூப் 2 தேர்வில் முறைகேடு நடப்பதற்கு வாய்ப்பே இல்லை !

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் குரூப் 2 தேர்வு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது . இதில் மொத்தம் 380 விண்ணப்பித்தனர். இதில் 47 நபர்கள் வரவில்லை 333 நபர்கள் தேர்வு எழுதினார்கள். தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை உறுப்பினர் முனி நாதன், IAS , ஆய்வு மேற்கொண்டார் , பின்பே செய்தியாளர்களுக்கு கூறுகையில் , நடைபெறுகின்ற குரூப் 2 தேர்வு விடைத்தாள்கள் மிகவும் பத்திரமாக எடுத்துச் சென்று தமிழ்நாடு அரசு ஊழியர் தேர்வு வாரியத்தின், மற்றும் கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்யப்பட்டு மிகவும் பத்திரமாக பாதுகாக்கப்படும். இதில் ஆள்மாறாட்டம் செய்வதற்கு மற்றபடி பேப்பர் மாற்றுவதற்கு முடியாது .இது அனைத்துமே கண்காணிக்கப்படுகின்றன. இவை அனைத்துமே ஆன்லைன் மூலமாக கண்காணிக்கப்படுகிறது , வினாத்தாள்கள் அனைத்துமே கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதால் , இதில் தவறு நடப்பதற்கு வாய்ப்பில்லை. அடுத்த மாதம் நடைபெறவுள்ள குரூப் 4 தேர்வுக்கு ஒரு முன்னோட்டமாக இந்த தேர்வு எழுதுகிறார்கள் . நான் விசாரித்த வரையில் அடுத்த மாதம் நடைபெறும் குரூப் 4 தேர்வுக்கு எப்படி நாம் எழுத வேண்டும் என்பதற்கு ஒரு முன்னோட்டமாக பலபேர் இன்றைய தேர்வில் கலந்துகொண்டு எழுதி உள்ளார்கள். பலர் இரவு பகலாக படித்து இந்த தேர்வில் கலந்து கொண்டிருக்கின்றார்கள் என்றார். பேட்டி அளிப்பவர் முனி நாதன் ஐஏஎஸ் தேர்வுத்துறை வாரியத்தின் உறுப்பினர். ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம்

VIDEOS

RELATED NEWS

Recommended