• முகப்பு
  • district
  • மேம்பாலத்தில் கான்கிரீட் ஓடுதளத்தின் இணைப்புகள் உடைந்து வாகன ஓட்டிகளின் உயிருக்கு ஆபத்து. விடியற்காலையில் 2 கார்கள் அந்த கம்பியில் மோதி...

மேம்பாலத்தில் கான்கிரீட் ஓடுதளத்தின் இணைப்புகள் உடைந்து வாகன ஓட்டிகளின் உயிருக்கு ஆபத்து. விடியற்காலையில் 2 கார்கள் அந்த கம்பியில் மோதி...

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாற்றிலிருந்து கீழம்பி சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் புறவழிச் சாலை அமைந்துள்ளது.காஞ்சிபுரம் நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்த புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. இதில் கீழ்கதிர்பூர் அருகே, வேகவதி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் வழியாக பெங்களூர் டு திண்டிவனம் மார்க்கமாக நாளொன்றுக்கு சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மிக கனரக வாகனங்கள், கார்கள், லாரிகள், இருசக்கர வாகனங்கள் என இந்த மேம்பாலத்தை கடந்து செல்கின்றது. சுமார் 750 அடி நீளமுள்ள இந்த மேம்பாலத்தில் 4 இடத்தில் உள்ள இணைப்புகளில் பொருத்தப்பட்டுள்ள இரும்பாலான ராடுகள் சமூக விரோதிகளால் வெட்டி எடுத்து களவாடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மேம்பாலத்தில் நடுப்பகுதியில் கான்கிரீட் ஓடுதளத்தின் இடையேயான இரும்பாலான இணைப்பு ராடுகள் சுமார் 15 அடி தூரத்திற்கு பெயர்ந்து மேல் நோக்கி நீண்டு கொண்டிருந்தது. விடியற்காலையில் இதை அறியாமல் வேகமாக வந்த இரண்டு கார்கள் அந்த கம்பியில் மோதி கவிழ்ந்து அதிர்ஷ்டவசமாக தப்பியது. இதைக் கண்ட மற்ற வாகன ஓட்டிகளும் அப்பகுதி மக்களும் சேர்ந்து மேல் நோக்கி நீண்டு கொண்டிருந்த ராடை முறுக்கி கீழ்ப்பகுதியில் சாய்த்தனர். இதை அறிந்து வந்த பாலுசெட்டி காவல்துறையினர் அப்பகுதியில் வாகனம் செல்லாத அளவுக்கு தடுப்பு ஏற்படுத்தி பேரிகார்டை வைத்தனர். இதைபற்றி பிள்ளையார் பாளையம் பகுதியை சேர்ந்த சேகர் என்பவர் கூறும்போது, நான் விடியற்காலையில் இந்த மேம்பாலத்தின் வழியாக தான் பைக்கில் வந்து கொண்டிருந்தேன். மேல் நோக்கி நீண்டு கொண்டிருந்த ராடை சற்றே கவனிக்காமல் இருந்தால் என்னுடைய உயிர் பறிபோகியிருக்கும் என அச்சத்துடன் கூறினார். இருசக்கர வானத்தில் வைத்து துணி வியாபாரம் செய்யும் ஜபார் என்பவர் கூறும்போது, மேம்பாலத்தின் வழியாக நான் குறைவான வேகத்தில் வந்து கொண்டிருந்தபோது இரும்பாலான ராடு மேல்நோக்கி நீண்டு கொண்டிருப்பதைக் கண்டு ஒதுங்கி சென்றேன். இல்லாவிடில் என் வயிற்றில் ராடு பாய்ந்து இருக்கும் என வேதனையுடன் தெரிவித்தார். ஏராளமான அரசு அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறையினர், மற்றும் காவல்துறையினர் இந்த வழியாகத்தான் கீழம்பி, பாலுசெட்டி சத்திரம் ,தாமல் உள்ளிட்ட பகுதிகளுக்கும் செவிலிமேடு ,வெங்கடாபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் செல்கின்றனர். அப்படியிருந்தும் இந்த கம்பியை அகற்ற யாரும் முன்வரவில்லை என்பது வேதனைக்குரியது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். எனவே நெடுஞ்சாலைத்துறையினர் மெத்தனப் போக்கை கைவிட்டுவிட்டு இந்த ராடை அகற்றி பாலத்தை உடனடியாக சீர் செய்யவேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த். இன்றைய செய்திகள் காஞ்சிபுரம்,இன்றைய முக்கிய செய்திகள் காஞ்சிபுரம்,இன்றைய செய்திகள் காஞ்சிபுரம்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest india news tamil,Tamil news daily,District news,india news live,Kanchipuram latest tamil news,Kanchipuram flash news,The links of the concrete runway on the flyover are broken, endangering the lives of motorists. At dawn 2 cars collided with that wire and fortunately escaped.

VIDEOS

RELATED NEWS

Recommended