• முகப்பு
  • district
  • பல்வேறு வளர்ச்சி திட்டப்பனிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார் அமைச்சர் சிவசங்கர்.

பல்வேறு வளர்ச்சி திட்டப்பனிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார் அமைச்சர் சிவசங்கர்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, குன்னம் பேருந்து நிலையத்தில் ரூ.40 லட்சம் மதிப்பில் நவீன பயனிகள் நிழற்குடையினையும் பெருமத்தூர் குடிகாடு – சமத்துவபுரம் தார் சாலை ரூ.62.81 லட்சம் மதிப்பீட்டிலும், அத்தியூர் – குடிகாடு தார் சாலை ரூ.45.98 லட்சம் மதிப்பீட்டிலும், அகரம் சீகூர் கருப்பட்டாங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு ரூ.19.00 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடத்திற்கான உட்பட பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து லெப்பைக்குடிக்காடு முதல் ஆத்தூர் வரை புதிய வழித்தட பேருந்து சேவையினையும், கீழப்பெரம்பலூர் ஊராட்சி வேள்விமங்கலத்தில் ரூ.50.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். பின்னர் திருமாந்துறை ஊராட்சி நோவா நகர் பகுதியிலும், அகரம் சீகூர் பகுதியிலும் பகுதி நேர நியாய விலைக்கடையினை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ,ப., அவர்கள், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் சி.ராஜேந்திரன் அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களுக்கு தேவையான திட்டங்களை அறிந்து அது கடைக்கோடி மக்கள் வரை சென்றடைவதில் தனி கவனம் செலுத்துவதனால் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது. குன்னம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குன்னம் பேருந்து நிலையத்தில் ரூ.40 லட்சம் மதிப்பில் நவீன பயனிகள் நிழற்குடை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் பெருமத்தூர் குடிகாடு – பரவாய் சமத்துவபுரம் தார் சாலை 1.2 கிலோமீட்டர் நீளத்திற்கு ரூ.62.81 லட்சம் மதிப்பீட்டிலும், அத்தியூர் – குடிகாடு தார் சாலை 1.77 கிலோமீட்டர் நீளத்திற்கு ரூ.45.98 லட்சம் மதிப்பீட்டிலும் தார் சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்தார். அகரம் சீகூர் ஊராட்சிக்குட்பட்ட கருப்பட்டாங்குறிச்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.19.00 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடத்திற்கான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து லெப்பைக்குடிக்காடு முதல் ஆத்தூர் வரை புதிய வழித்தட பேருந்து சேவையினை தொடங்கி வைத்தார். இப்பேருந்து ஆத்தூரில் இருந்து காலை 3.50 மணிக்கும் மாலை 3.10 மணிக்கும் லெப்பைக்குடிக்காட்டிற்கு புறப்படும். அதேபோல் லெப்பைக்குடிக்காட்டில் இருந்து காலை 7.00 மணிக்கும், மாலை 6.35 மணிக்கும் ஆத்தூருக்கு புறப்படும். கீழப்பெரம்பலூர் ஊராட்சி வேள்விமங்கலத்தில் ஆதி திராவிடர் நலத்துறையின் சார்பில் ரூ.50.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காகவும் திறந்து வைத்தார். பின்னர் திருமாந்துறை ஊராட்சி நோவா நகர் பகுதியில் பகுதி நேர நியாய விலைக்கடையினையும், வயலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திலிருந்து அகரம் சீகூர் பகுதியில் பகுதி நேர நியாய விலைக்கடையினையும் திறந்து வைத்து பொதுமக்களுக்கான உணவுப் பொருட்களை வழங்கினார். இந்நிகழ்வுகளில் பெரம்பலூர் கோட்டாட்சியர் ச.நிறைமதி, மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் பால்பாண்டி, கூட்டுறவுத் துணைப் பதிவாளர்கள் செல்வராஜ், பாண்டித்துரை, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் முத்தமிழ்ச்செல்வி மதியழகன், வேப்பூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, லெப்பைக்குடிக்காடு பேரூராட்சித் தலைவர் ஜாகிர் உசேன். துணத்தலைவர் ரசூல், ஊராட்சி மன்ற தலைவர்கள் (வேப்பூர்) தனம் பெரியசாமி, , (குன்னம்) தனலெட்சுமி மதியழகன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் கருணாநிதி, ஒன்றிய குழு உறுப்பினர் உமா சந்திரகுமார், முக்கிய பிரமுகர் மருவத்தூர் சி.ராஜேந்திரன், குன்னம் வட்டாட்சியர் அனிதா, முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவர் நீளமேகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் செய்தியாளர் ஜஹாங்கீர்.

VIDEOS

RELATED NEWS

Recommended