• முகப்பு
  • india
  • கலைக்கொல்லிகளால் விவசாயத்துறையே அழியுதா?

கலைக்கொல்லிகளால் விவசாயத்துறையே அழியுதா?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

அறிவியல், விவசாயிகளுக்கு அளித்த பரிசு களைக்கொல்லிகள். ஆனால், கடந்த 30 ஆண்டுகளாக புதிய களைக்கொல்லிகள் வரவே இல்லை. இதனால், களைகள், களைக்கொல்லி மருந்துகளை எதிர்த்து வளரும் தன்மையைப் பெற்றுள்ளன. கடந்த 1980களில் 38 களைகளே விவசாயிகளின் எதிரிகளாக இருந்தன. ஆனால், 2022ல், அழிக்க முடியாத களைகளின் எண்ணிக்கை 513 ஆகியுள்ளது. இந்நிலையில், புதிய களைக்கொல்லிகளை விரைவில் உருவாக்கும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது, பிரிட்டனிலுள்ள எம்.ஓ.ஏ., நிறுவனம். ஒரு களைக்கொல்லி எப்படி களையின் செல்களை பாதித்து, அதன் வளர்ச்சியைத் தடுக்கிறது என்பதை, எம்.ஓ.ஏ.,வின் விஞ்ஞானிகள் கண்டறிகின்றனர். ஒரு வேதிப்பொருளுக்கு களைகளைக் கொல்லுமா என்பதை, களைகளின் செல்கள் வரை ஆராய்ந்து கண்டறிகிறது எம்.ஓ.ஏ.,வின் குழு. இதன் மூலம் புதிய களைக்கொல்லிகளை வேகமாக உருவாக்க முடியும். களைகளுக்கு முடிவுகாலம் ஆரம்பமாகிவிட்டது.

VIDEOS

RELATED NEWS

Recommended