• முகப்பு
  • அரசியல்
  • நாகைக்கு வருகை புரிந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு ஜோதி யாத்திரை குழுவினர்: நாகை காங்கிரஸ் கட்சியினர் சார்பில் உற்சாக வரவேற்பு:

நாகைக்கு வருகை புரிந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு ஜோதி யாத்திரை குழுவினர்: நாகை காங்கிரஸ் கட்சியினர் சார்பில் உற்சாக வரவேற்பு:

செ.சீனிவாசன்

UPDATED: May 19, 2023, 10:10:34 AM

முன்னாள் பாரத பிரதமர் இராஜீவ் காந்தி நினைவு தினம் வருகிற 21 ம்‌ தேதி ஸ்ரீபெரும்புதூரில் அவரது நினைவிடத்தில் அனுசரிக்கப்பட உள்ளது. அதனை முன்னிட்டு இராஜீவ் ஜோதி யாத்திரை கன்னியாகுமரியிலிருந்து துவங்கி மதுரை, திருச்சி, தஞ்சை நாகை வழியாக சென்னை ஸ்ரீபெரும்புதூரை சென்றடைய உள்ளது.

எதிர்வரும் வரும் மே 21ஆம் தேதி மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் ஜோதி ஒப்படைக்கப்பட்டு, நினைவிடத்தில் ஜோதி ஏற்றப்பட உள்ளது.

இதனை முன்னிட்டு நாகை மாவட்ட எல்லையான காணூர் சோதனை சாவடி அருகே ஜோதி யாத்திரை குழுவினர் வருகை தந்தனர். மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர்.என்.அமிர்தராஜா தலைமையில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும் பேண்ட் வாத்தியங்கள் முழங்கவும் ஜோதியை உற்சாகமாக வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி ஜோதி யாத்திரை கீழ்வேளூர் கடத்தெரு, சிக்கல், நாகை அவரித்திடல் வழியாக நாகூர் சென்றடைந்து வழி நடுவிலும் காங்கிரஸ் கட்சியினர் ராஜீவ் காந்தி ஜோதி யாத்திரை வரவேற்கும் விதமாக பேண்ட் வாத்தியங்கள் முழங்க பூக்களைத் தூவி, பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளித்து நாகப்பட்டினம் மாவட்ட எல்லையான நாகூரில் வழி அனுப்பி வைத்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended