• முகப்பு
  • cinema
  • Crazy Star விஜித் நடிக்கும் புதிய திரைப்படம் தர்மயுகம்

Crazy Star விஜித் நடிக்கும் புதிய திரைப்படம் தர்மயுகம்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சமிபத்தில் திரையரங்குகளில் வெளியான சில்லாட்ட திரைப்படம் மற்றும் வேலி வர இருக்கும் குட்டிச்சாத்தானுக்கு 5 பொண்டாட்டி , வீரமகன் , அகிலம் நீ ,போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த Crazy Star விஜித் இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார் மற்றும் கதாநாயகியாக தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகை நடிக்க இருக்கிறார் கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பு அய்யா வைகுண்டசுவாமி தலைமைபதி கலையரங்கில் குரு பால ஜனாதிபதி தலைமையில் லட்சகணகான அய்யா வழி பக்தர்களின் முன்நிலையில் தர்மயுகம் திரைபடத்தின் Title அறிமுக விழா நடந்தது. வைகுண்டர் கிரேஷன்ஸ் சார்பில் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை தயாரிக்கும் இந்த. திரைப்பத்திற்கு கதை வசனம் மேற்பார்வை குரு பலஜனாதிபதி அவர்கள் எழுத தேனிசை தென்றல் தேவா இசை அமைக்கிறார் , M P அழகன் தயாரிப்பு பொறுப்பாளராக செயல்படுகிறார் ,சில்லாட்ட படத்தின் இயக்குனர் சிவராகுல் இந்த படத்துக்கு திரைக்கதை ஏழுதி இயக்குகிறார் நதியா , பிரியா படேல் , ராதா ரவி, கஞ்சா கருப்பு , சிங்கம் புலி , வையாபுரி , பயில்வான் ரங்கநாதன் , வைகாசி ரவி , முத்துக்காளை , போண்டா மணி , கராத்தே ராஜா , விஜய் கணேஷ் , சுப்புராஜ் நடிக்கிறார்கள் . சிறப்பு தோற்றத்தில் குரு பாலஜனாதிபதி மற்றும் பிரபல நடிகர் நடிக்கவுள்ளனர். இயக்குனர் சிவராகுல் கூறுகிறார் - ஜாதி கொடுமைகளை வேறருக்க வந்த வைகுண்டசாமியின் உண்மை சம்பவங்களை சித்தரிக்கும் வகையில் உருவாகும் திரைபடம் தர்மயுகம் இந்த படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி , திருநெல்வேலி , திருவனந்தபுரம் , சென்னை , ஹைட்ரபாத் , பகுதியில் நடக்க உள்ளது. இலங்கை செய்தியாளர் அஹ்மத் அஸ்ஜத்.

VIDEOS

RELATED NEWS

Recommended