கந்துவட்டி புகார் எண்கள்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ராமநாத புரத்தில் கந்து வட்டி தொடர்பான புகார்களை தெரிவிக்க தொலை பேசி எண்கள் அறிவிப்பு. ராம நாதபுரம் மாவட்டத்தில் கந்து வட்டி தொடர்பான புகார்களை தெரிவிப் பதற்கான தொலை பேசி எண்களை மாவட்ட எஸ்.பி கார்த்திக் வெளியிட்டு உள்ளார். முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், கந்து வட்டி தொடர்பான புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும், கந்து வட்டி வழக்குகளை கையாளவும் டிஜிபி சைலந்திரபாபு அறிவுரை படி ஆபரேஷன் கந்து வட்டி தொடங்கப் பட்டு, அதிக வட்டி வசூல் தடைசட்டம் 2003 ன்படி உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப் பட்டு உள்ளது. இதன்படி, ராமநாத புரம் மாவட்டத்தில் கந்து வட்டி என்ற பெயரில் அதிகவட்டிக்கு கடன்வாங்கி கந்துவட்டி கும்பல்களால் மிரட்டப் படுபவர் கந்து வட்டி தொழில் செய்பவர் தொடர்பான புகார்களை சம்பந்தப் பட்ட உட்கோட்ட துணைகாவல் கண்காணிப்பாளர் அலுவலக தொலை பேசி எண்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலோ, நேரடியாகவோ அல்லது தொலை பேசி மூலமாகவோ புகார் தெரிவிக்கலாம். புகார்கள் தொடர்பான விசாரணை உடனுக்குடன் நடத்தப் பட்டு சம்பந்தப் பட்டவர் மீது உடனடியாக கடும்நடவடிக்கை எடுக்கப் படும். மேலும், தகவல் தெரிவிப் பவர் பற்றிய விபரங்கள் ரகசியம் மிகவும் காக்கப் படுமென ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி கார்த்திக் தெரிவித்து உள்ளார். புகார் அளிக்க தொலை பேசி எண்கள். காவல் கட்டுப்பாட்டு அறை 04567 - 230904, 04567 - 230759. ஹலோ போலீஸ் - 8300031100. மாவட்ட தனிப்பிரிவு - 04567 - 290113, 9498101615. ராமநாதபுரம் உட்கோட்டம் - 94981 01616. பரமக்குடி உட்கோட்டம் - 94981 01617. கமுதி உட்கோட்டம் - 94981 01618. ராமேஸ்வரம் உட்கோட்டம் - 94981 01619. கீழக்கரை உட் கோட்டம் 94981 01620. திருவாடானை உட் கோட்டம் 94981 01621. முதுகுளத்துர் உட்கோட்டம் - 04576 290208. செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended