நாகையில் பாஜக- திமுக இடையே ஏற்பட்ட மோதல் விவகாரம்:காவல் துறை ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக குற்றம்.குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்

நாகப்பட்டினம்  அக்கரைப்பேட்டை டாடா நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜேயந்திரன்திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்துள்ளார். 

இந்நிலையில் நடந்து முடிந்த நகர்மன்ற தேர்தலில் இவர் சீட் தர மறுத்த நிலையில்ஃ திமுகவில் இருந்து விலகி பாஜகவில் அண்மையில் இணைந்துள்ளார். இந்த நிலையில் விஜேயந்திரனுக்கு பாஜக மாவட்ட செயலாளராக பதவி வழங்கப்பட்டுள்ளது. 

அதை கொண்டாடும் விதமாக அந்தப் பகுதியில் விஜயேந்திரன் ஆதரவாளர்கள் மற்றும் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடிய போது  அருகில் இருந்த திமுக நகர்மன்ற உறுப்பினர் ஞானமணி மளிகை கடையில் பட்டாசு விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் நகர்மன்ற உறுப்பினர் ஞானமணிக்கு காதில் காயம் ஏற்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறியதோடு  பாஜக சேர்ந்த 5 பேருக்கும், திமுகவைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர் உள்பட 2 பேருக்கு காயம் ஏற்பட்டது. இந்தநிலையில் இரண்டு தரப்பினர் தாக்கிக் கொள்ளும் பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியாகி மேலும்  பரபரப்பை  ஏற்படுத்தியது.

மோதல் தொடர்பாக 
போலீசார் இரு  தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் திமுக தரப்பில் 7 பேர்‌ மீதும் பாஜக சார்பில் 4 பேர் மீதும் வழக்கு பதவி  செய்யப்பட்டு பாஜகவை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் காவல்துறை ஒருதலை பட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டி
பாஜக சார்பில் நாகை அவுரித்திடலில்
கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. பாஜக மாநில துணைத்தலைவர்   கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் பங்கேற்று காவல் துறைக்கு எதிராக கண்டன‌ கோஷங்களை எழுப்பினர்‌.

ஆர்பாட்டத்தையொட்டி 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்‌.

நாகை மாவட்ட செய்தியாளர் சீனிவாசன்.
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Final 300 Battle Hit Scene | Hollywood Scene

தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

கவிஞர் வைரமுத்துவின் சூப்பர் ஹிட் பாடல்கள் | Vairamuthu's Super Hit Songs #vairamuthusongs #songs

விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Top 10 beautiful actress in the world | hot actress

மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

தி ஓஸ்ட் சைனீஸ் டப்பிங் திரைப்படம் | The Host Tamil Dubbed Full movie | Oscar Winner Film #dubbedmovies #movies #tamilmovies