• முகப்பு
  • விளையாட்டு
  • தேசிய அளவிலான தடகள போட்டி - தங்கம் வென்றவர்களுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு 

தேசிய அளவிலான தடகள போட்டி - தங்கம் வென்றவர்களுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு 

JK

UPDATED: Jun 18, 2024, 7:08:31 PM

இந்திய இளைஞர் விளையாட்டு சங்கம் சார்பில் காஷ்மீரில் கடந்த 11-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை 3நாட்கள் 4வது ஒய்.எஸ்.பி.ஏ. தேசிய சாம்பியன்ஷிப் 2024 தடகள போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து 1200க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டிகள் 5000 மீட்டர், 3000 மீட்டர், 800 மீட்டர் என பல்வேறு பிரிவுகளை நடைபெற்றது.

இப்போட்டியில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு சார்பில் திருச்சி மாவட்டத்தில் இருந்து 3வீரர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். 

நடைபெற்ற போட்டியில் திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியை நேர்ந்த அவினேஷ்குமார் (20) 5ஆயிரம் மீட்டர் தடகளப் போட்டியில் முதல் இடமும், திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த அருண்குமார் (20) 800 மீட்டரில் முதல் இடமும், சமயபுரம் பகுதியை சேர்ந்த ஜெயசூர்யா(18) 3ஆயிரம் மீட்டரில் ஆகியோர் முதல் இடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றனர்.

வெற்றி பெற்ற வீரர்கள் இன்று திருச்சி ரெயில் நிலையத்தில் வந்தடைந்தனர். அவர்களுக்கு தடகள பயிற்சியாளர், பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் மாலை அணிவித்து பொன்னாடை போற்றி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 

VIDEOS

Recommended