- முகப்பு
- விளையாட்டு
- கிழக்கு மாகாண ஆணழகன் போட்டியில் முதலாம் இடத்தினை பெற்று எம்.எல்.எம்.ஸப்ராஸ் தேசியத்திற்கு தெரிவு
கிழக்கு மாகாண ஆணழகன் போட்டியில் முதலாம் இடத்தினை பெற்று எம்.எல்.எம்.ஸப்ராஸ் தேசியத்திற்கு தெரிவு
எஸ்.எம்.எம்.முர்ஷித்
UPDATED: Jun 4, 2024, 7:35:00 PM
கிழக்கு மாகாண ஆணழகன் போட்டியில் கோறளைப் பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் செம்மண் ஓடையை சேர்ந்த எம்எல்.எம்.ஸப்ராஸ் முதலாம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்.
கிழக்கு மாகண விளையாட்டுத் துறை அமைச்சின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களம் ஏற்பாடு செய்து நடாத்திய ஆணழகன் போட்டியில் 60-65 இடைப்பிடிவில் தங்கப்பதக்கினை பெற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் எமது பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஓவர்ரோல் மொத்த கணிப்பீட்டில் மூன்றாம் இடத்தினை பெற்று மிஸ்டர் ஸ்டன் (MISTER EASTEN) எனும் பட்டத்தினையும் பெற்றுள்ளார்.
இவரை கோறளைபற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில், விளையாட்டு உத்தியோகத்தர் ஏ. இன்சாத் மொஹமட் அலி, மாவட்டத்தில் உள்ள விளையாட்டு கழகங்கள், இளைஞர் கழகங்கள், பொது அமைப்புகள், ஒரியன்ட் (ORIEANT) உடல் பயிற்சி நிலைய அங்கத்தவர்கள் அனைவரும் வாழ்த்தி கௌரவிக்கின்றனர்.
இவர் தேசிய சுற்று போட்டியிலும் நல்ல பெறுபேற்றினை பெற்று எமது மண்ணுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம் என்று கோறளை பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கும் கல்குடா கராத்தே விளையாட்டு கழகத்தின் தலைவர் ஏ.ஆர்.எம். நவாஸ் தெரிவித்தார்.