உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் விதியை மீறி ஜெயித்த கத்தார்.

Bala

UPDATED: Jun 12, 2024, 5:36:46 AM

உலககோப்பை கால்பந்து தகுதிப்போட்டியில், இந்தியா-கத்தார் இடையேயான ஆட்டத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

73வது நிமிடத்தில், எல்லைக் கோட்டை தாண்டி சென்ற பந்தை மீண்டும் உள்ளே கொண்டு வந்து கத்தார் வீரர்கள் கோல் அடித்ததால் பரபரப்பை ஏற்படுத்தியது. 

விதிகளின்படி இது தவறு என்றாலும், ரெஃப்ரீ கத்தாருக்கு சாதகமாக நடந்து கொண்டது பெரும் சர்ச்சையாக மாறியது. 

அல் ஹசன் பந்தை கோட்டுக்கு வெளியே இருந்து மீண்டும் உள்ளே தள்ளியபோது, அய்மென் அதை கோலாக மாற்றியதால் கத்தார் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 

இந்த விளையாட்டில் VAR (வீடியோ அசிஸ்டன்ட் ரெஃப்ரீ) முறையை பயன்படுத்தாதது குறித்து ரசிகர்கள் அதிருப்தி மற்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

 

VIDEOS

Recommended