மாகாண சம்பியன்களை கௌரவிக்கும் நிகழ்வு

உமர் அறபாத் - ஏறாவூர்

UPDATED: May 25, 2024, 6:49:59 PM

2024 ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாணமட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் சம்பியனாக தெரிவான ஏறாவூர் கோல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினரை கௌரவிக்கும் நிகழ்வு 25/05/2024 சனிக்கிழமை  ஏறாவூர் சமூக சேவைகள் அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் எம்.பாறூக் தலைமையில் ஏறாவூர் நகரசபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வின் பிரதம அதிதியாக ஏறாவூர் நகர சபையின் விஷேட ஆணையாளரும் செயலாளருமான எம்.எச்.எம்.ஹமீம்  கலந்து சிறப்பித்ததுடன் கௌரவ அதிதிகளாக சிரேஸ்ட விரிவுரையாளரும் அமைப்பின் ஆலோசகருமான ஏ.றியாஸ் மற்றும் உபதலைவர் எம்.எஸ்.முஸம்மில் மற்றும் ஆலோசகர் றியாஸ் மௌலவி மற்றும் ஹாஜா முகைதீன்ஏ.எல்.ஆரீஸ் ,மற்றும் ஆலோசகர் சிக்கன்தர் உட்பட அமைப்பின் நிருவாக உறுப்பினர்களும் கலந்து கொண்டதுடன் கிழக்கு மாகாண சம்பியனாக மகுடம் சூடிய ஏறாவூர்கோல்ட் ஸ்டார் விளையாட்டுக்கழக வீரர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு நினைவுச்சின்னமும் வழங்கி கௌரவிப்பு அளிக்கப்பட்டது .32 வருடங்களுக்கு பிறகு பிரதேச மட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் ஊடாக கிழக்கு மாகாண சம்பியனாக தெரிவுசெய்யப்பட்ட ஏறாவூர் கோல்ட் ஸ்டார் விளையாட்டு கழகம் அடுத்த மாதம் இடம்பெறவிருக்கின்ற தேசிய ரீதியிலான மென்பந்து கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது .

 

VIDEOS

Recommended