நாளை முதல் பணிக்கு செல்லுங்கள் - இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொது செயலாளர் வேண்டுகோள்
இ. தொ. க. ஊடடக பிரிவு
UPDATED: Jul 25, 2024, 12:58:24 PM
வேலைநிறுத்த போராட்டம் காரணமாக தங்களுடைய தொழில் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் அனைவரும் போராட்டங்களை கைவிட்டு நாளை(26) முதல் தொழிலுக்கு செல்லுமாறு அறிவிப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் கூறியுள்ளார்.
பெருந்தோட்ட கம்பனி ஒன்றின் கீழ் இயங்கும் நானுஓயா உடரதல்ல தோட்டத்தில் கடந்த மே மாதம் தேயிலை காணியில் கோப்பி பயிரிடப்பட்டதை எதிர்த்து தோட்ட முகாமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மூன்று தலைவர்களையும் தோட்ட நிர்வாகம் பதவி நீக்கம் செய்தது. இவ்விடயம் எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து உடனடியாக நான் களத்திற்கு சென்று நடவடிக்கைகளை மேற்கொண்டதனால் குறிப்பிட்ட தோட்ட முகாமையாளரினால் எனக்கெதிராக வழக்கு தொடரப்பட்டதன் காரணமாக சந்தேக நபர்களை நீதி மண்றத்தில் ஆஜராகுமாறு நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக கேள்வியுற்று அனைத்து பொது மக்கள் சார்பாகவும் குறிப்பிட்ட பெருந்தோட்டக் கம்பனிக்கு எதிராக தொடர்ச்சியாக அடையாள வேலை நிறுத்தத்தினை மேற்கொண்டு வருகின்றீர்கள்.
வேலைநிறுத்த போராட்டம் காரணமாக தங்களுடைய தொழில் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் அனைவரும் போராட்டங்களை கைவிட்டு நாளை முதல் (26.07.2024) தொழிலுக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
இதுவரை காலமும் போராட்டங்களை மேற்கொண்ட அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு, உடரதலை தோட்டத்தினை நிர்வகிக்கும் பெருந்தோட்ட கம்பனியின் செயற்பாடுகளுக்கு எதிராக நாங்கள் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் எனவும் தெரிவித்துக்கொள்கின்றேன்.