திமுக விற்கு வாக்களித்த மக்களுக்கு மின்கட்டணத்தை உயர்த்தி பரிசளித்ததற்கு அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்.
லட்சுமி காந்த்
UPDATED: Jul 23, 2024, 12:54:37 PM
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட தாலுக்கா அலுவலகம் அருகே, விடியா திமுக அரசு தமிழகத்தில் மூன்றாவது முறையாக மின்கட்டணத்தை உயர்த்தியும், நியாய விலைக்கடைகளில் வழங்கப்பட்டு வரும் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சிக்கும் விடியா திமுக அரசை கண்டித்து, மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மின்கட்டணத்தை உயர்த்தியும்; நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட்டு வரும் துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சிக்கும் விடியா திமுக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மக்களின் வாழ்வாதாரம் காக்கவும், மக்களுக்கு விடியல் கிடைக்கவும், மூன்றாவது முறையாக மின்கட்டணத்தை உயர்த்திய திமுக அரசைக் கண்டித்தும், நியாய விலைக் கடைகளில்
துவரம் பருப்பு மற்றும் பாமாயிலை நிறுத்த முயற்சிக்கும் விடியா திமுக அரசைக் கண்டித்தும், வரிச் சுமைகளை பரிசாக அளிக்கும், விடியா திமுக அரசை கண்டித்தும்,
வாக்களித்த மக்களை வஞ்சிக்காதே!
ஸ்டாலின் அரசே! ஸ்டாலின் அரசே!
ஷாக் அடிக்குது! ஷாக் அடிக்குது!
மின்கட்டண உயர்வைக் கேட்டாலே, ஷாக் அடிக்குது!
நியாயமா, இது நியாயமா ?
மின்கட்டணத்தை உயர்த்தியது நியாயமா?
Latest Kancheepuram News & Live Updates
சீரழியுது! சீரழியுது!
கொலை, கொள்ளை, போதைப் பொருட்கள் வழிப்பறி உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டால் தமிழ் நாடே சீரழியுது! தமிழ் நாடே சீரழியுது!!
கெட்டுப் போச்சு! கெட்டுப் போச்சு விடியா திமுக ஆட்சியிலே சட்டம்-ஒழுங்கு கெட்டுப் போச்சு! 200 நாட்களிலே மாநிலம் முழுவதும் நடைபெற்றுள்ள 595 கொலைச் சம்பவங்களே இதற்கு சாட்சி!
பாதுகாப்பு வேண்டும்! பாதுகாப்பு வேண்டும்!
பெண்களுக்கும், மாணவிகளுக்கும், முதியவர்களுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பு வேண்டும்!
பதவி விலகு! பதவி விலகு!!
குடும்ப ஆட்சி நடத்தும் பொம்மை முதலமைச்சரே பதவி விலகு!
நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் அரசே பதவி விலகு!
என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டது.
அதிமுக
இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதநந்தபுரம் கே.பழனி உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.