• முகப்பு
  • உலகம்
  • டெல் அவிவ் தாக்குதலில் ஏமனின் ஹூதிகள் மாற்றியமைக்கப்பட்ட ட்ரோன் விமானங்கள்

டெல் அவிவ் தாக்குதலில் ஏமனின் ஹூதிகள் மாற்றியமைக்கப்பட்ட ட்ரோன் விமானங்கள்

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Jul 23, 2024, 1:28:40 AM

டெல் அவிவ் மீது முன்னெப்போதும் இல்லாத வகையில் ஹவுதி தாக்குதல் நடத்தியது, அது எதிர்பார்க்கப்பட்ட  வரம்பை விட 500 கிலோமீட்டர் தூரம் பறந்த மறுவடிவமைக்கப்பட்ட ஆளில்லா விமானத்தின் விளைவாகும் என்று இஸ்ரேல் கூறுகிறது.

 இது நகரத்தின் மீது மே ற்கொள்ளப்பட்ட  முதல் ஹவுதிகளின் தாக்குதல் மற்றுமல்லாது ஹூதிகளின் வளர்ந்து வரும் திறன்களை காற்றுகிறது என்று ஆய்வாலர்கள் தெரிவிக்கிறனர்.

ஞாயிற்றுக்கிழமை ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணையை சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் கூறியது மற்றும் ஒரு நாள் முன்னதாக ஈரானுடன் இணைந்த குழுவிற்கு எதிராக இஸ்ரேலின் முதல் தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலிய நகரமான ஈலாட் மீது பல ஏவுகணைகளை வீசியதாக யேமன் ஹூதி இயக்கம் கூறியது.

ஹூதிகள் இஸ்ரேல் மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை ஏவியுள்ளனர் மற்றும் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக செங்கடல் வழியாக உலகளாவிய வர்த்தகத்தை சீர்குலைத்துள்ளனர்,

மேலும் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு பாலஸ்தீனிய பகுதியில் போர் மூண்டதால் மத்திய கிழக்கை மேலும் ஸ்திரமின்மைக்கு உட்படுத்தியுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

காசா போர் தொடங்கியதில் இருந்து ஹூதிகள் தமக்கு எதிராக 200 தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது, அவற்றில் பல இடைமறித்ததாகவும் அவற்றில் பெரும்பாலானவை ஆபத்தானவை அல்ல என்றும் கூறுகிறது.

 

VIDEOS

Recommended