பள்ளிவாசல் நிருவாக மற்றும் சரிஆ நடை முறைகள் தொடர்பான இருவார கால பயிற்சிப் பட்டறை
மலேசியவிலிருந்து ஏ.எஸ்.எம்.ஜாவித்
UPDATED: Jul 24, 2024, 10:16:48 AM
இலங்கை அரசாங்கத்தின் ஆலோசனையின் பெயரில் மலேசியா அரசாங்கத்தினால் இன்சிடியுட் லத்திக்கான் இஸ்லாமியா மலேசிய அரச நிறுவனத்தினல் பள்ளிவாசல் நிருவாக மற்றும் சரிஆ நடைமுறைகள் தொடர்பான இருவார கால பயிற்சிப் பட்டறையில் 14பேர் கொண்ட இலங்கை குழு பங்குபற்றியுள்ளனர்.
ALSO READ | விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.
இலங்கை வக்பு சபை அங்கத்தவர்கள் இருவரும் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள அதிகாரிகள் மூவருடன் பள்ளி வாசல் களின் நம்பிக்கையாளர்கள் என 14 பேர் கொண்ட குழுவினர் குறித்த பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டுள்ளனர்.
நேற்று 10வது (24) தினத்தில் மலேசியாவின் மாண்புமிகு செனட்டரும் மத விவகாரங்களுக்கு பொறுப்பான பிரதமர் துறையின் துணை அமைச்சருமான டாக்டர் சுல்கிப்லி பின் ஹசன் கலந்து கொண்டு சமுகங்களுக்கு இடையிலான சக வாழ்வு தொடர்பான விளக்கத்தை வழங்கினார்.
இதன் போதுமலேசிய இஸ்லாமிய பயிற்சி நிறுவனத்தின் மூத்த இயக்குநர் நோர் சபீனா ,
மலேசிய தொடர்பு நிறுவனப் பிரிவு, மலேசியா இஸ்லாமிய பயிற்சி நிறுவனம் மற்றும் மலேசியா இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை தலைவருமான நோரஸ்மா பிந்தி இஸ்மாயில் மலேசியாவின் இஸ்லாமிய விவகாரங்களுக்கான செயலகத்தின் ஆட்சி மற்றும் நிர்வாகப் பாட நெறியின் அதிகாரி மொகமட் ஜக்கி ஆகியோரும் கலந்து கொண்டுள்ளார்.
இலங்கை குழுவினை வக்பு சபை உறுப்பினர்களான சட்டத்தரணி மத்தீன், அஷ் ஷெய்க் முஸ்தபா ரஸா, திணைக்கள உதவிப் பணிப்பாளர் அலா அஹமட் ஆகியோர் வழி நடாத்தி சென்றனர்.