புகைப்படம் எடுப்பதற்காக காரை விட்டுச் சென்ற நபருக்கு நடந்த துயரம்
Irshad Rahumathulla
UPDATED: Jul 10, 2024, 6:01:34 PM
சுற்றுலா பயணத்தில் இருந்த மனிதன், புகைப்படம் எடுப்பதற்காக காரை விட்டுச் சென்ற வேளை யானையால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
இவ்வாறு 43 வயதான ஸ்பானிய நாட்டைச் சேர்ந்த நபரே யானைக்கூட்டத்தால் மிதித்து உயிரிழந்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் பிலானெஸ்பெர்க் தேசிய பூங்காவில் சுற்றுலாப் பயணியாக இருந்த நபர், ஞாயிற்றுக்கிழமை காலை விலங்குகளை படம் எடுப்பதற்காக தனது வாகனத்தை விட்டுவிட்டு இறங்கி சென்று புகைப்படம் எடுக்க முற்பட்டார்
அவர் தனது வருங்கால மனைவி மற்றும் இரண்டு பேருடன் காரில் தேசிய பூங்காவைச் சுற்றிக் கொண்டிருந்தபோது மூன்று வயது நிரம்பிய்ய யானையும் மற்றும் மூன்று குட்டிகளும் எதிர்கொண்டன.
அந்த நபர் வாகனத்தை நிறுத்தி, இறங்கி யானைகளுக்கு அருகில் சென்று படம் பிடித்ததாக சம்பவத்தினை நேரில் கண்ட அவருடன் பயணித்தவர்கள் காவல் துறையிடம் கூறியுள்ளனர்.
அந்த நபர் படம் எடுக்க ஆரம்பித்ததும் யானை ஒன்று அவர் மீது சரமாரியாக தாக்கியது.
அவரது சக பயணிகளிடமிருந்தும், மற்ற இரண்டு வாகனங்களில் இருந்தவர்களிடமிருந்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், அவர் துரதிர்ஷ்டவசமாக அவர்களின் எச்சரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை" என்று வட மேற்கு பூங்காக்கள் மற்றும் சுற்றுலா வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதன்பிறகு மற்ற யானைகளும் ஆவேசத்துடன் இணைந்து தாக்கின.இதனால் அவர் உயிர் இழந்ததாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.