ஒலுவில் அல்-ஹம்றா வித்தியாலயம் 30 போட்டிகளில் மாகாண மட்டத்திற்கு தெரிவு

எஸ்.அஷ்ரப்கான்

UPDATED: Jul 10, 2024, 7:41:35 AM

அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் மூன்று நாட்களாக நடைபெற்ற அக்கரைப்பற்று வலய பாடசாலைகளுக்கு இடையிலான 2024 ஆம் ஆண்டுக்கான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில், ஒலுவில் அக்/அல் - ஹம்றா மகா வித்தியாலயம்மொத்தமாக 31 இடங்களை பெற்றுக் கொண்டது.

original/inshot_20240710_130634801

இங்கு ஆண்கள் பிரிவில் 21 போட்டிகளும் 

பெண்கள் பிரிவில் 09 போட்டிகளும் இடம் பெற்றது.இதில் 18-முதலாம் இடங்களையும்- 12 இரண்டாம் இடங்களையும்

01-மூன்றாம் இடத்தையும் இம்மாணவர்கள் பெற்றுக் கொண்டனர். 

வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் இம்மாணவர்களை வழி நடாத்திய அதிபர் அஷ்-ஷெய்க் யு.கே.அப்துர் ரஹீம், இணைப்பாட விதானத்திற்கு பொறுப்பான பிரதி அதிபர் ஜே.வஹாப்தீன் மற்றும் பிரதி; உதவி அதிபர்கள், ஆசிரிய ஆசிரியைகளுக்கும் விளையாட்டுப் பொறுப்பாசிரியர்களான ஆர்.நெளஸாத், ஏ.எம்.எம்.கியாஸ் மற்றும்விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் ஏ.அஸ்மத் ஸஹி ஆகியோருக்கும் பாடசாலை சமூகம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

 

VIDEOS

Recommended