• முகப்பு
  • விளையாட்டு
  • காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.

காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.

JK

UPDATED: Oct 15, 2024, 2:07:55 PM

திருச்சி மாவட்டம்

தென்ஆப்பிரிக்கா, சன்சிட்டியில் கடந்த 8ம் தேதி முதல் 14ஆம் தேதி வரை பவர் லிப்ட் சாம்பியன் போட்டிகள் நடைபெற்றது.

இந்த போட்டியில் திருச்சி மாவட்டம், மணப்பாறை சேர்ந்த ராஜேஸ்வரி 69எடை பிரிவில் 3தங்கமும், 1வெள்ளிப் பதக்கமும், பாலமுருகன் 120 எடைப் பிரிவில்  தங்கப்பதக்கம், இதேபோல் திருச்சி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்த ஷேக்அப்துல்லா 59எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளனர்.

காமன்வெல்த்

வெற்றி பெற்ற வீரர்கள் இன்று திருச்சி விமான நிலையத்துக்கு வந்தடைந்தனர். அவர்களை திருச்சி மாவட்டம் பளுதூக்கும் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுபேர் மற்றும் வெற்றி பெற்ற வீரர்களின் குடும்பத்தினர், கல்லூரி நண்பர்கள், ஜென்னிஸ் கல்லூரியின் அஜய் மற்றும் அருள்மொழி ஆகியோர் வெற்றி பெற்ற வீரர்களுக்கு ரோஜா பூ மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து மேள, தாளத்துடன் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

பளு தூக்கும் போட்டி

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட பளு தூக்கும் சங்க மாவட்ட செயலாளர் சுபேர் தமிழக அரசு பளு துக்குப் போட்டியில் வெற்றி பெற வீரர்களுக்குஅரசு வேலை வழங்க வேண்டும் 

மேலும் தமிழக அரசு திருச்சியில் ஆர்வமுள்ள வீரர்கள் மற்றும் ஏழை மாணவர்கள் பயிற்சி பெறும் வகையில் பளுதூக்கும் அகாடமி ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

 

VIDEOS

Recommended