• முகப்பு
  • தமிழ்நாடு
  • இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் நவாஸ் கனி எம்.பி. கோரிக்கை

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் நவாஸ் கனி எம்.பி. கோரிக்கை

கார்மேகம்

UPDATED: Jul 25, 2024, 10:17:27 AM

இராமநாதபுரம் மாவட்டம்

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என நவாஸ் கனி எம்.பி.கோரிக்கை ( மீனவர்கள் கைது)

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பாம்பன் தங்கச்சிமடம் ராமேஸ்வரம் உள்ளிட்ட  பகுதிகளில் ஏராளமான மீனவர்கள் வசித்து வருகின்றனர்

இப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளில் கடலுக்கு சென்று மீன்பிடித்து அதில் கிடைக்க கூடிய வருவாயில் வாழ்ந்து வருகின்றனர்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் சம்பவங்கள் தொடர் கதையாக இருந்து வருகின்றன கடந்த 5 ஆண்டுகளாக நவாஸ் கனி எம்.பி.இது குறித்து  நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மீண்டும் மீனவர்கள் கைது செய்யப்படுவது சம்பந்தமாக நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் மீனவர்களின் பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்

நவாஸ் கனி

அதில் நவாஸ் கனி எம்.பி.கூறியிருப்பதாவது ( நிரந்தர தீர்வு வேண்டும்) மக்களவையின் நடவடிக்கைகளை ஒதுக்கி வைத்து விட்டு  தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் ஒத்திவைப்பு தீர்மானம்  கொண்டுவரப்பட வேண்டும்

இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகின்றனர் இதற்கான நிரந்தர தீர்வை காண வேண்டும் என நீண்ட நாட்களாக மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்

ஆனால் இதற்கான நிரந்தர தீர்வு காணப்படாமல் தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவதும் அவர்களின் படகுகள் சிறை பிடிக்கப்படுவதும்  தொடர்கதையாகி உள்ளன இச்சம்பவத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது

( மக்களவை நடவடிக்கையை ஒத்தி வைக்க வேண்டும்)

Ramanathapuram District News in Tamil

இதற்கிடையில் ராமநாதபுரம் மாவட்டம்  பாம்பன் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற (25 ) மீனவர்களையும் (4) நாட்டுப் படகுகளையும் கடந்த 30- ந்தேதி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தது.

இப்படி‌தொடர்ந்து கைது செய்து கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள் விஷயத்தில் நிரந்தர தீர்வை உடனடியாக காண விவாதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் இது குறித்து உடனடியாக மக்களவையின் நடவடிக்கைகளை ஒத்தி வைத்து விட்டு விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்ற மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கோரியுள்ளேன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

VIDEOS

Recommended