ஜீவன் தொண்டமான் நல்லவருக்கு நல்லவர் மக்கள் உரிமைக்காக அவரை வேறு வடிவிலும் பார்க்கலாம் என்கிறார் - அர்ஜுன்
இர்ஷாத் ரஹ்மத்துல்லா
UPDATED: Jul 25, 2024, 3:26:32 AM
மக்களுக்கு அநீதி நடக்கும் போது தட்டிக்கேட்பவர் சண்டியர் என்றால் ஜீவன் தொண்டமான் மலையகத்தின் சண்டியர் தான்...!என்கின்றார் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இளைஞர் அணி சிரேஸ்ட அமைப்பாளர் கொத்மலை - புஸ்ஸல்லாவ அர்ஜுன்.
ALSO READ | குழந்தைகளை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை
தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டு களனிவெளி தோட்ட நிர்வாகத்துக்கு உட்பட்ட தோட்டங்களில் தேயிலை செடிகளை அகற்றிவிட்டு கோப்பி பயிரிட களனிவெளி தோட்ட நிர்வாகம் முனைப்புக்காட்டிய போது நானு ஓயா-உடரதல தோட்டத்தின் அதை தொழிற்சங்க ரீதியில் கேட்ட தோட்ட தலைவர்களை அடாவடியின் உச்சத்தில் அவர்களின் தொழில் இடைநிறுத்தப்பட்ட நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தோட்ட தலைவர்களால் தோட்ட தொழிலாளர்களால் அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு தகவல் வழங்கப்பட்டது.
அடிமைத்தனம் போக்க அதிரடியாக உள் நுழைந்து அடாவடி களனிவெளி கம்பனியை தட்டிக்கேட்டு தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்தார். ஆனால் பல்லாயிரம் வாக்குகள் பெற்று காங்கிரஸ் மற்றும் தொண்டமானை குறைகூற பாராளுமன்றம் சென்ற எந்த அரசியல் தலைமைகளும் அந்த மக்களை கண்டுகொள்ளாமல் கைவிட்ட நிலையில் அரசியல் தொழிற்சங்கம் பாராது உரிமைக்காக போராடிய அமைச்சர் அடாவடியில் ஈடுபட்டதாக களனிவெளி தோட்ட நிர்வாகத்தால் வழக்கு தொடரப்பட்டு அமைச்சர் ஜீவன் தொண்டமானை கைதுசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இவ்வாறான மக்கள் சார்ந்த விடையங்களில் ஜீவன் தொண்டமான் செயற்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாத இனவாதிகளும் அரசியல் தலைமைகளும் அதற்கு வியாக்யானம் பேசும் அவர்களின் ஆதரவாளர்கள் மற்றும் சமூக போராளிகள் என்று சமூக வலைத்தளங்களில் தொண்டமானையும் காங்கிரஸையும் பற்றி வழமைப்போல் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறன.
களனிவெளி கம்பனி சார்ந்த தோட்ட தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாது எந்த தோட்டத்தில் எந்த கம்பனி அராஜக போக்கை கையில் எடுத்தாலும் அங்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் இளைஞர் அணி முன் நிற்கும். ஆனால் தொழிலாளர்களின் வாக்குக்களை சூறையாடிய எந்த அரசியல் தலைமையும் சமூக வலைத்தளங்களில் தன் விளம்பரங்களுக்காக விமர்சனம் செய்பவர்களால் வேடிக்கை மாத்திரமே பார்க்க முடியும்...!
மலையகத்தில் தேர்தல் காலங்களில் மட்டும் நூற்றுக்கணக்கான தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் அரசியல் தலைமைகளும் அரசியல் தரகர்களையும் காண முடியும். இவ்வாறான சமூகம் சார்ந்த பிரச்சனைகள் எழும் போது விமர்சனமாகவும் ,ஊடக அறிக்கைகளாகவும் மாத்திரமே செயற்படுகிறார்கள் என்பதை அனைவரும் உணர்ந்த நிலையில் தான் இன்றைய இளைஞர் யுவதிகள் புத்திஜீவிகள் தோட்ட தொழிலாளர்கள் என பலதரப்பட்ட மலையகத்தை நேசிப்பவர்கள் ஜீவன் தொண்டமானுடன் கரம் கோர்த்து செயற்படுகிறார்கள் என்றும் அர்ஜுன் தெரிவித்துள்ளார்.