• முகப்பு
  • இலங்கை
  • ஹட்டன் பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் – சசிகுமார்

ஹட்டன் பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் – சசிகுமார்

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Dec 22, 2024, 4:55:20 PM

ஹட்டன் பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” - என ஜனநாயக மக்கள் முன்னணியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நேற்று முன்தினம் ஹட்டன் மல்லியப்பு சந்திப் பகுதியில் கண்டி நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 50 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

இந்தச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. இதற்கு பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தோடு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

தற்போது குறித்த பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன். குறிப்பாக, பண்டிகைக் காலங்களில் அதிக விபத்துகள் ஏற்படுவதாக பொலிஸ் அறிக்கை கூறுகின்றது.

எனவே, மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறேன்.- என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

VIDEOS

Recommended