• முகப்பு
  • உலகம்
  • ஹமாஸின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் மகன்கள் மற்றும் பேரக் குழந்தைகள் வான்வழித்தாக்குதழால் மரணம்

ஹமாஸின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் மகன்கள் மற்றும் பேரக் குழந்தைகள் வான்வழித்தாக்குதழால் மரணம்

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Apr 11, 2024, 6:00:09 AM

ஹமாஸின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே தனது மூன்று மகன்கள் மற்றும் நான்கு பேரக்குழந்தைகள் காசாவில் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார்.காசா நகருக்கு அருகிலுள்ள அல்-ஷாதி முகாமில் அவரது மகன்கள் பயணித்த கார் மோதியதாக ஹமாஸ் தொடர்புடைய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Also Read :திருகோணமலை நகரில் மக்கள் போராட்ட இயக்கத்தினர் உணவு தவிர்ப்பு போராட்டம்

போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பேச்சுவார்த்தையில் ஹமாஸின் கோரிக்கைகளை இந்த சம்பவம் மாற்றாது என்று ஹனியே கூறினார்.மகன்கள் ஹமாஸின் இராணுவப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று இஸ்ரேல் இராணுவம் கூறியது.முஸ்லீம் பண்டிகையான ஈத் பண்டிகையின் முதல் நாளைக் குறிக்கும் வகையில் குடும்ப கொண்டாட்டத்திற்கு குழு சென்றதாக கூறப்படுகிறது.

Also Read : இலங்கை - பங்களாதேஷ் போட்டியில் பங்கு கொண்டிருந்த தினேஷ் சந்திமால் அவசரமாக நாடு திரும்புகின்றார்

ஹசீம், அமீர் மற்றும் முஹம்மது ஆகிய மூன்று மகன்கள் போரின் போது காசாவில் தங்கியிருந்ததாக ஹனியே கூறினார்."துரோக மற்றும் கோழைத்தனமான இவ்வாறான செயற்பாட்டால் கொல்லப்பட்டவர்களில் ஹனியேவின் நான்கு பேரக்குழந்தைகள் - மோனா, அமல், கலீத் மற்றும் ரஸான் ஆகியோர் அடங்குவர் என்று ஹமாஸின் அறிக்கை பின்னர் கூறியது.

Also Read : சோள செய்கைக்கான விதை பதப்படுத்தும் நிலையம் வவுனியாவில் திறந்து வைப்பு

ஹமாஸ் தலைவர் வசிக்கும் கத்தார் தலைநகர் தோஹாவுக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட காயமடைந்த பாலஸ்தீனியர்களைப் பார்வையிடச் சென்றபோது தான் இந்தச் செய்தியைக் கேட்டதாக ஹனியே கூறினார்.

 

VIDEOS

Recommended