• முகப்பு
  • அரசியல்
  • நம்முடைய திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவது தான் பாஜகவின் வேலை - ஆளூர் ஷாநவாஸ்

நம்முடைய திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவது தான் பாஜகவின் வேலை - ஆளூர் ஷாநவாஸ்

JK 

UPDATED: Apr 15, 2024, 7:59:19 PM

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் இந்திய கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுகவின் வேட்பாளர் துரைவைகோவை ஆதரித்து விடுதலை சிறுத்தை கட்சியின் துணைப்பொதுச் செயலாளரும்.

நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான ஆளுர்ஷாநவாஸ் திருச்சி மாவட்டம் திருவரம்பூர் பகுதியில் உள்ள வ.உ.சி.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில் :

இந்த தேர்தல் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான மாபெரும் யுத்த களத்தில் நாம் இருக்கிறோம். 

இந்தத் தொகுதியில் தளபதி சுட்டிக்காட்டிய, எழுச்சி தமிழரின் அன்பைப் பெற்ற வேட்பாளர் துரைவைகோ போட்டியிடுகிறார்.

தீப்பட்டி சின்னத்தில் போட்டியிடும் துரை வைகோ அவர்கள் லட்சோப லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும்.

நாடு இன்றைக்கு மோசமான கட்டத்தில் இருக்கிறது தமிழகத்தில் தளபதி தலைமையில் ஒரு நல்லாட்சி நடைபெற்று வருகிறது.

ஒரு கோடிக்கு மேலான தமிழ்நாடு பெண்களுக்கு மாதம்தோறும் உரிமைத் தொகையை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

உலகத்தில் எங்கும் இது போல் மாதம் உரிமை தொகை வழங்கப்படுவதில்லை. தமிழகத்தில் மட்டும்தான், தளபதி மட்டும்தான் வழங்கிக் கொண்டிருக்கிறார்.

இந்த உரிமை தொகை மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கிடைக்காது. இப்படிப்பட்ட திட்டங்களை ஏன் என்று மத்திய அரசு மாநில அரசுக்கு நெருக்கடியை கொடுத்து வருகிறது.மோடி அரசு நிதி தர மாட்டோம் என கூறுகின்றனர்.

மேலும் வர வேண்டிய நிதியை கூட தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மீண்டும் அவர்கள் ஆட்சியில் அமர்ந்தால் முதலில் கை வைப்பது இந்த திட்டத்தில் தான்.

சமூகத்தில் இவர் படிக்க வேண்டும், இவர் படிக்கக் கூடாது என கொள்கை வைத்திருப்பது பிஜேபி கட்சி.

நாம் ஒருகொள்கை வைத்திருக்கிறோம் எல்லா பிள்ளைகளும் படிக்க வேண்டும் பள்ளிக்கூடத்திற்கோ கல்லுரிக்கு போகாம இருக்க கூடாது என மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்த அரசு தற்போது மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

மோடி ஆட்சி மீண்டும் வந்தால் இதனையும் தடுத்து விடுவார்கள்.

இதே போல் உலகத்தில் எங்கும் இல்லாத ஒரு திட்டம் காலை உணவு திட்டம். இந்த திட்டம் வரவேண்டும் என சட்டமன்றத்தில் முதலில் குரல் கொடுத்தவன் நான்.

கனடா தேசத்திலேயே பிரதமர் நமது திட்டத்தை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மோடி ஆட்சி மீண்டும் வந்தால் இந்த திட்டத்திலும் கை வைப்பார்கள். 

ஏன்? நமது ஆட்சி தானே நடக்கிறது என்று கேள்வி எழுப்பலாம்.

ஒன்றிய அரசு நமக்கு நிதி தர வேண்டிய ஒரு நிலை இருக்கிறது. மாநில அரசாக நாம் வரி கட்டுகிறோம். ஒரு ரூபாய் நாம் கொடுத்தால் மத்திய அரசு நமக்கு 29 காசு தான் தருகிறது.

ஆனால் மற்ற மாநிலங்களுக்கு அதிகமாக நிதி கொடுக்கிறது.பல நெருக்கடிகளை கொடுத்து தான் இந்த 29 பைசாவையும் கொடுக்கிறார்கள். 

இது போன்ற நலத்திட்டங்கள் இருந்தால் 29 பைசாவும் தர மாட்டேன் என்று மோடி அரசு சொல்லும். 

நம்முடைய உணர்வுகளை அறிந்து கொள்ளும் அரசு மேலே வர வேண்டும்.

எந்த கட்சியை நம்முடைய தேர்தல் அறிக்கை பிரதிபலித்திருக்கிறது. காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் பிரதிபலிக்கிறது.

பிஜேபியில் பாட்டாளி மக்கள் கட்சி இருக்கிறது அவர்கள் சொன்னது பிஜேபியின் தேர்தல் அறிக்கையில் இருக்கா இல்லை.

நாம் சொல்வதெல்லாம் ராகுல் காந்தி செய்வேன், செய்து தருவேன் என்கிறார்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஐந்து முறை தமிழகத்தில் வந்திருக்கிறார் மோடி. இன்று கூட தமிழகத்தில் தான் இருக்கிறார். தமிழ்நாடு எவ்வளவு விரட்டி விட்டாலும் தமிழ்நாட்டை விட்டு போக மாட்டேன் என்கிறார்.

தமிழகம் வெள்ளத்தில் மிதந்து பாதிக்கப்பட்டார்கள் மக்களை பார்க்கவே வரவில்லை. இப்போது ஓட்டுக்காக வருகிறார். 

நம்முடைய உணர்வுகளை ராகுல் காந்தி புரிந்து வைத்திருப்பதால் தான் ஐந்து முறை மோடி தமிழகம் வந்தும் மக்கள் மோடியை பார்க்க வரவில்லை.

எனவே மக்கள் வரக்கூடிய இடத்திலே ரோட்ஷோ வைக்கிறார்கள் அன்றும் மக்கள் வரவில்லை தமிழக மக்கள் தெளிவாக உள்ளனர்.

அவருடைய ஷோ வெறும் ஷோவாகவே முடிந்து விட்டது. ராகுல் காந்தியை வந்தார் ரோட்டை தாண்டி ஒரு ஸ்வீட் வாங்கினார் அஞ்சு முறை நடந்த ஷோ 5 நிமிஷத்தில் காலியாகிவிட்டது. 

கோடி கோடியாக செலவு செய்து  கிடைக்காத பயன், ஒரு கிலோ ஸ்வீட்டில் கிடைத்துவிட்டது.

அந்த ஸ்வீட்டை ஸ்டாலினிடம் கொடுத்து நீங்கள் தான் அண்ணன் என்று கூறினார்.

இது சீட்டு கணக்கு செய்து வைக்கப்பட்ட கூட்டணி அல்ல, இது கொள்கையை அடிப்படையாக வைத்துள்ள கூட்டணி. அதனால்தான் நாங்கள் உறுதியாக உள்ளோம். 

அதிமுகவுக்கும் அண்ணாமலைக்கும் உள்ள பிரச்சனை தான் கூட்டணியில் இருந்து பிரிந்துள்ளனர். இவர்கள்தான் தமிழ்நாட்டை விற்று கொண்டு, பிஜேபிக்கு எல்லாவற்றிற்கும் ஒத்துழைத்தவர். பிஜேபி நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்திட்டவர்கள் .

இன்று பிஜேபியை எதிர்ப்பதாக எடப்பாடி பழனிச்சாமி காட்டிக் கொள்கிறார்.

கொடும் மக்கள் விரோத, சிறுபான்மையினர்கள் விரோத சட்டங்கள் வருவதற்கு காரணமாக இருந்தவர்தான் எடப்பாடி பழனிச்சாமி. இன்று நாடகமாடுகிறார். இப்படிப்பட்ட வேடதாரிகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

ஒரு போராளியாக களத்தில் நின்று பல்வேறு பிரச்சனைக்காக, நமக்காக போராடிய ஒரு தலைவர் தான் வைகோ. அவருடைய புதல்வர் தான் துரைவைகோ இந்த தொகுதியில் தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிடுகிறார்.

சரித்திரத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தும் மண் திருச்சி. திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் திருச்சிக்கும் மிகப்பெரிய வரலாற்று பொருத்தம் உள்ள இடம் இது இந்த மண்ணில் துரைவைக்கே போட்டியிடுகிறார். அவருக்கு பெருவாரியான வாக்குகள் வழங்க வேண்டும்.

மோடி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. 

தமிழகத்தின் தளபதி பல்வேறு திட்டங்களை கொடுத்தார். ஆனால், மோடி ஒரு திட்டங்களாவது கொடுத்தாரா?

பிரதமர் வீடு கட்டும் திட்டம் ஒன்று இருக்கிறது அதற்கு நிதி அதிகப்படியான தருவது தமிழ்நாடு அரசு. நம்முடைய பணத்தை வைத்துக் கொண்டு அவர்கள் பெயர் வைத்துக் கொள்கிறார்கள். இப்படித்தான் ஸ்டிக்கர் ஒட்டுகிற அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

மோடி மீண்டும் வந்தால் நாடு நாடாக இருக்காது. 

மோடி வந்தால் அம்பேத்கர் எழுதிய அரசியல் அமைப்புச் சட்டத்தில் தான் கையை வைப்பார். 

ஏனென்றால் அது எல்லோரும் ஒன்று என்றும், சமம் என்கிறது எல்லோரும் ஒன்று, சமம் என்றால் பிஜேபி காரனுக்கு பிடிக்காது.

சமூக நீதிக்கும், இட ஒதுக்கீட்டுக்கும் மாநில உரிமைக்கும், மாநில சுயாட்சிக்கும் எதிரான கட்சி. மக்கள் நல திட்டங்களுக்கு எதிரான கட்சி இலவசங்களை கொச்சைப்படுத்துகிற கட்சி இலவச திட்டங்கள் கூடாது என்று சொல்லுகின்ற கட்சி.

நிர்மலா சீதாராமன் திட்டங்களை பிச்சை என்று சொல்கிறார். வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு கொடுத்தது, அது மத்திய அரசு கொடுத்திருக்க வேண்டும். அப்படி நிவாரணம் கொடுத்ததை கொச்சைப்படுத்தியவர் தான் நிர்மலா சீதாராமன். அவர்கள் கொடுக்க மாட்டார்கள் கொடுத்ததை கொச்சைப்படுத்துவார்கள். 

இப்படிப்பட்ட ஒரு நிலையில் தான் தேர்தல் வந்திருக்கிறது அவர்களை வீட்டுக்கு அனுப்பக்கூடிய தேர்தல் . 

அந்த ஆட்சியை மீண்டும் வரவிடாமல் தடுக்க கூடிய தேர்தல் அதை தடுக்கக்கூடிய வலிமை நமக்கு தான் உண்டு, வாக்கு உரிமை நம் கையில் இருக்கிறது அதனை பயன்படுத்தி அவர்களை வீட்டுக்கு அனுப்புவோம்.

கல்வியில் பல்வேறு புரட்சிகளை கொண்டு வருகிறவர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெற்றி வேட்பாளரை உங்களிடம் கொண்டு வந்திருக்கிறார். அவரை வெற்றி பெற வைப்பது அமைச்சருக்கு நாம் செலுத்தும் மரியாதையாக இருக்கும். அமைச்சரின் கரத்தையும் நாம் வழுப்படுத்த வேண்டும்.

கல்வி தொடர்பாக ஏற்கனவே சொன்ன திட்டங்களில் நிறைய திட்டங்கள் இவரது துறையில் தான் வருகிறது. பட்டியல் போட்ட திட்டங்களில் நான்கு திட்டம் அமைச்சு உடையது தான்.

அந்த அளவு தமிழகம் கல்வியில் முன்னேறி உள்ளது.

தமிழ்நாட்டின் அரசியலை தீர்மானிக்க கூடியது கல்வி, எனவே தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து துரை வைகோவை வெற்றி பெற வைக்க வைக்க வேண்டும் என தெரிவித்தார்.

பிரச்சாரக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துவாக்குடி ஒன்றிய செயலாளர் குணா மற்றும் நிர்வாகிகள் திமுக, கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சியின் நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

  • 1

VIDEOS

Recommended