• முகப்பு
  • அரசியல்
  • பிரதமர் மோடியை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்து தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் - ஜவாஹிருல்லா

பிரதமர் மோடியை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்து தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் - ஜவாஹிருல்லா

ரமேஷ்

UPDATED: Apr 25, 2024, 6:45:40 PM

கும்பகோணத்தில் மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் தனது பொறுப்பு மிக்க பதவியின் கண்ணியத்தையும் சிறப்பையும் சீர்குலைக்கும் வகையில் ஒரு நாட்டின் பிரதமர் பேசியிருப்பது இந்திய நாட்டையே உலக அரங்கில் வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொல்லாததை உண்மைக்கு மாறாக பேசி உள்ளார். தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிராக அவர் பேசியுள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் நடுநிலையை நிரூபிக்கும் வகையில் மக்களை பிளவுபடுத்தும் வகையில் பேசிய பிரதமர் மோடியை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அவருடைய பரப்புரைக்கு தடை விதிக்க வேண்டும். இனி அவர் தேர்தலில் போட்டியிடாத வகையில் தடை விதிக்க வேண்டும்.

மேலும், தமிழகத்தில் முதல் கட்ட நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. தேர்தல் ஆணையமும் கட்டுப்பாடுகளை சற்று தளர்த்தியுள்ளது.

இருந்தாலும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்கள் திறக்க அனுமதி அளிக்காமல் தற்போது வரை பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் பணி செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

எனவே தேர்தல் ஆணையம் மறு பரிசீலனை செய்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்களை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

 

  • 12

VIDEOS

Recommended