• முகப்பு
  • உலகம்
  • உக்ரைனின் ஆளில்லா விமான தாக்குதலில் இலங்கை இராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு

உக்ரைனின் ஆளில்லா விமான தாக்குதலில் இலங்கை இராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Mar 29, 2024, 3:49:59 AM

ரஷ்ய உக்ரைன் போரில் ரஷ்ய இராணுவத்துடன் இணைந்து முன்னோக்கி பாதுகாப்பு போர்முனையில் போரிடச் சென்ற இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

Also Read : தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி புதுச்சேரியின் வேட்பாளர்கள் பட்டியல்

முன்னோக்கி பாதுகாப்பு வரிசையின் பதுங்கு குழிகளில் உக்ரேனிய இராணுவ ஆளில்லா விமானங்கள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலிய இராணுவத்தில் இணைந்த நிபுனா சில்வா என்ற சிப்பாய் கொல்லப்பட்டார்.

பதுங்கு குழி மீதான தாக்குதலின் பின்னர், நிபுன சில்வாவுக்கு உதவியாக இருந்த சேன பண்டார என்ற இலங்கை  இராணுவ வீரர் பின்வாங்கிக் கொண்டிருந்த போது மற்றொரு ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

Also Read : ஹெரோயின் போதைப்பொருள் தன் கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் பண்டாரவளை பொலிஸாரினால் கைது

மாதம் மூவாயிரம் அமெரிக்க டாலர் சம்பளம் தருவதாக கூறி இலங்கை இரானுவத்தில்  இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் மற்றும் அதிகாரிகளை இந்தியா மற்றும் துபாய்க்கு சுற்றுலா விசா மூலம் அழைத்துச் சென்று போலந்து வழியாக ரஷ்யாவுக்கு அழைத்துச் சென்றமை தெரியவந்துள்ளது.

முன்னதாக இதே போன்று கடந்த ஆண்டு ரஷ்ய-உக்ரைன் போரில் கலந்து கொள்ள உக்ரைன் ராணுவத்தில் இணைந்த  3 பேர் கடந்த ஆண்டு ரஷ்ய தாக்குதலில் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : நிகழ்நிலை காப்புச் சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல்

VIDEOS

Recommended