• முகப்பு
  • உலகம்
  • தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசநாயக்க டொரன்டோவில்

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசநாயக்க டொரன்டோவில்

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Mar 25, 2024, 12:22:40 AM

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க கனடா நகரில் இடம் பெற்ற பல்வேறு சந்திப்புக்களில் கலந்து கொண்டுள்ளார்.

Also Read : சோள செய்கைக்கான விதை பதப்படுத்தும் நிலையம் வவுனியாவில் திறந்து வைப்பு

டொரோண்டோவில் வசிக்கின்ற இலங்கை வாழ் மக்கள் விடுத்த அழைப்பின் பேரில் அனுரகுமார திச நாயக்க அங்கு விஜயம் மேற் கொண்டார்.

அதேவேளை டோரண்டோ நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்திலும் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திசாநாயக்க உரையாற்றி இருந்தார்.

Also Read : 1000 மாணவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்ட சூது கவ்வும்

 தமது உரையின் போது 88/ 89 காலப் பகுதிகளில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் தாங்கள் கவலை அடைவதாகவும் அவ்வாறானதொரு  சம்பவங்களை தவிர்த்து இருப்பதற்கு கடந்த கால அரசாங்கங்கள் சந்தர்ப்பங்களை வழங்கவில்லை என்றும் தங்களால் இடம் இடம்பெற்ற இவ்வாறான சம்பவங்களுக்கு மனம் வருந்துவதாகவும் அவர் அங்கு தெரிவித்திருந்தார்.

Also Read : தேசிய அடையாள அட்டை விடயத்தில் தோட்ட நிர்வாகத்தின் தலையீடு தேவையில்லை

இதேவேளை  கனடாவின் ரொறன்ரோவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு எங்களிடம் கேள்விகளை கேட்க வந்த கனடாவில் வாழும் அனைத்து இலங்கையர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக X  தளத்தில் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

VIDEOS

Recommended