• முகப்பு
  • தமிழ்நாடு
  • தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை‌ தடுக்க கச்சத்தீவை மீட்க வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை‌ தடுக்க கச்சத்தீவை மீட்க வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை.

கார்மேகம்

UPDATED: Apr 11, 2024, 8:46:04 AM

முன்னால் முதல் அமைச்சர்‌ ஓ.பன்னீர்செல்வம்‌ வெளியிட்டுள்ள‌ அறிக்கையில் கூறியிருப்பதாவது 

இலங்கைக்கு கச்சத்தீவு  தாரைவார்க்கப்பட்டதில் இருந்து தமிழக மீனவர்கள் பல்வேறு துயரத்திற்கு ஆளாகி‌ வருகிறார்கள் அவர்களுடைய வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது

தமிழக‌‌ மீனவர்கள்‌ இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதும் சிறை பிடிக்கப்படுவதும்‌ படகுகள் மற்றும் வலைகள் சேதப்படுத்தப்படுவதும் தொடர் கதையாக‌ நிகழ்ந்து வருகிறது

கடந்த இரு தினங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை  கடற்படையினர் தாக்கியது மிகுந்த மன  வேதனை அளிக்கிறது

மனிதாபிமானமற்ற இந்த செயல் கடும்‌‌ கண்டனத்திற்குரியது, இது ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

தற்போது‌ள்ள சூழலில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரின் தாக்குதலில்‌ இருந்து நிரந்தரமாக தடுப்பதற்கான ஒரே வழி இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக தாரை வார்க்கப்பட்ட  இந்தியாவின் ஒரு பகுதியான கச்சத்தீவு இலங்கை நாட்டிடம் இருந்து மீட்டெடுக்கப்பட வேண்டும் இதைத்தான் தமிழக மீனவர்கள் எதிர்பாக்கிறார்கள்‌

இதனை நன்கு உணர்ந்த முன்னால் மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா  கடந்த 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட‌ கச்சத்தீவு தாரைவார்ப்பு தொடர்பான இந்திய‌ இலங்கை நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தங்கள் செல்ல தக்கவை அல்ல என்று அறிவிக்க கோரி சுப்ரீம்கோர்ட்டில் கடந்த 2008-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்

இதன் அடிப்படையில் கச்சத்தீவு மீட்டெடுக்கப்படும் நாள் வெகு தூரத்தில்‌ இல்லை இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  • 2

VIDEOS

Recommended