• முகப்பு
  • இலங்கை
  • தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தகவல் பிரச்சாரப் பிரிவின் செயலமர்வு

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தகவல் பிரச்சாரப் பிரிவின் செயலமர்வு

அஷ்ரப் ஏ சமத்

UPDATED: Mar 28, 2024, 4:30:16 AM

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தகவல் பிரச்சாரப் பிரிவினால் 25 மாவட்டங்களில் இருந்தும் 25 ஊழியர்களை தெரிபுg செய்து அவர்களுக்கு சமூக ஊடக வலையத்தளங்கள் ஊடாக தத்தமது மாவட்டங்களில் நடைபெறும் வீடமைப்பு அபிவிருத்திகள் மக்களின் குறைபாடுகள் மற்றும் பிரச்சாரப்படுத்துவதற்காக சமூக ஊடக பயிற்சிக் கருத்தரங்கு கொழும்பில் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை வீடமைப்பு அதிகார சபை மேற்கொண்டது.

Also Read : பெண் முயற்சியாளர்கள் தங்களின் திறமைகளை வெளி கொண்டுவருவதற்கான ஒரு களம்

அதன்  தலைவர் சட்டத்தரனி ரஜிவ் சூரியாராச்சி மற்றும் பொது முகாமையாளர் பொறியியலாளர் ஜானக்க, மற்றும் உதவி பொது முகாமையளர் சுபசிங்க ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

அத்துடன் இத்துறையில் விசேட பயிற்சி பெற்ற ஏசியன் மிரர் வெப்தள ஆசிரியர் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் உள்ள தமிழ் பேசும் வீடமைப்பு அலுலவகர்களுக்கும் சமூக வலைத்தளங்கள் பற்றிய ஊடக விரிவுரைகளை தமிழ் மொழியில் இடம் பெற்றது.

Also Read :சில தமிழ் மக்கள் தலைவர்கள் சிங்களவரை அண்டிப் பிழைத்தல் தான் சரி என்ற எண்ணத்தில் வாழ்ந்து வருகின்றனர்

முழுநாள் பயிற்சியை வெற்றிகரமாக பூர்த்தி செய்தவர்களுக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சட்டத்தரனி ரஜிவ் சூரியாரச்சியினால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.

 

Also Read : 2022/2023 திறமையாளர்கள் பாராட்டு

VIDEOS

RELATED NEWS

Recommended